ஒரு அங்குலத்தில் அடங்கிய ஒன்றரை அடி குறள்
சென்னை:
ஒரு அங்குலம் சைஸ் புத்தகத்தில் 1330 திருக்குறளை பேனாவில் எழுதியுள்ளார்தஞ்சாவூர் இளைஞர் ஒருவர்.
அந்த இளைஞரின் சாதனையை வெகுவாக பாராட்டிய த.மா.கா. தலைவர் மூப்பனார்,அந்த ஓரங்குல திருக்குறள் நூலை பூதக்கண்ணாடி (லென்ஸ்) உதவியுடன் படித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணியம். இவர்ஒரு அங்குலம் அளவில் உள்ள புத்தகத்தில் பேனாவினால் 1330 திருக்குறளையும்எழுதி புதிய சாதனை புரிந்துள்ளார்.
இவருக்கு த.மா.கா. சார்பில் சத்தியமூர்த்தி பவனில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் மூப்பனாரிடம், அந்த சிறிய திருக்குறள் நூலைவழங்கினார் வேங்கட சுப்ரமணியம்.
தம்மாத்துண்டு பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கப்பட்டிருந்த அந்த ஒரு அங்குலபுத்தகத்தை லென்ஸ் மூலம் படித்துப் பார்த்தார் மூப்பனார். பின்னர் அந்த சாதனைஇளைஞருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,ஜெயந்தி நடராஜன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தமாகா இலக்கிய அணித் தலைவர் இதயத்துல்லா ஏற்பாடுசெய்திருந்தார்.












Click it and Unblock the Notifications