பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது
வாஷிங்டன்:
இஸ்ரேல், பாலஸ்தீன மோதல் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையில், அமரிக்க எதிர்ப்புதீவிரவாதிகளால் தாக்குதல் வரலாம் என்ற சந்தேகத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட 22நாடுகளில் உள்ள தனது தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 37தூதரகங்களை அமெரிக்கா மூடத் திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தரவுவெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது என்று அமெரிக்க வெளியுறவுத் துறைசெய்தித்தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் கூறியுள்ளார்.
தெற்காசியாவில் தூதரகம் மூடப்பட்டுள்ள ஒரே நாடு பாகிஸ்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க தூதரகஅதிகாரிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால் தூதரகத்தை அமெரிக்காமூடியுள்ளதாகத் தெரிகிறது.
முஸ்லீம் நாடுகளான வங்கதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் முஸ்லீம்தீவிரவாதம் இல்லாததால், அங்கு தூதரகத்தை மூடவில்லை. மத்திய கிழக்கு நாடுகள்மற்றும் பாகிஸ்தானில்தான் முஸ்லீம் தீவிரவாதம் அதிகமாக இருப்பதாக அமெரிக்காகருதுகிறது.
இதற்கிடையே, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள் மிகவும் எச்சரிக்கையுடன்இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.அமெரிக்க தூதரகங்கள் மூலம் இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகொடுக்கப்பட்டுள்ளது.
டமாஸ்கஸ் (சிரியா), பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்) ஆகிய தூதரகங்கள் கடந்தகாலங்களில் அதிக முறை வன்முறையாளர்களால் தாக்கப்பட்டதால், இந்த முறைமிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீன மோதல் மற்றும் அக்டோபர் 12-ம் தேதி ஏமன் நாட்டுத்துறைமுகதக்தில் நிறுத்தப்படடிருந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் குண்டு வைத்துத்தகர்க்கப்பட்டதில் பல அமெரிக்கர்கள் இறந்தது ஆகியவற்றையும் மிகுந்தஎச்சரிக்கையுடன் கையாள திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படலாம் என்றுசந்தேகிப்பதால் தூதரகங்களை மூட அமெரிக்கா முடிவு செய்தது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications