வெளிநாட்டுப் பயிற்சியாளர் தேவையில்லை .. கெய்க்வாட் எதிர்ப்பு
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவதற்குஇந்திய அணியின் இப்போதைய பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
கென்யாவில் நடைபெற்ற ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டியில்ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஆகிய வலுவான அணிகளை வென்று இறுதிஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோற்ற இந்திய அணி செவ்வாய்க்கிழமை காலைநாடு திரும்பியது.
மும்பை விமான நிலையத்துக்கு வீரர்களுடன் வந்த பயிற்சியாளர் கெய்க்வாட்நிருபர்களிடம் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர்தேவையேயில்லை. நான் ஏற்கெனவே இந்திய அணியின் பயிற்சியாளராகஇருந்துள்ளேன்.
இப்போது மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இந்திய அணிக்குப்பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்தின் முடிவாகும்.
அதில் யாரும் தலையிட முடியாது. வாரியம்தான் இந்திய அணிக்கு வெளிநாட்டுப்பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதை என்னால் தடுக்க முடியாது.ஆனால், இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் தேவையில்லை என்பதைநான் சொல்ல முடியும்.
தற்போதைய இந்திய அணி தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய உத்வேகத்துடன்வெற்றிக் கனிகளைப் பறிக்க புறப்பட்டுள்ளது. ஐ.சி.சி. நாக் அவுட் போட்டியில் உலகசாம்பியனான ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்க அணியையும் தோற்கடித்தது.
இந்திய அணியினரே வீறு கொண்டு புதிய தெம்பைப் பெற்றிருக்கும்போதுவெளிநாட்டுப் பயிற்சியாளரிடமிருந்து அவர்களுக்கு என்ன வேண்டியிருக்கிறதுஎன்பதுதான் எனது கேள்வி.
மற்றபடி வேறு எந்தக் கருத்தையும் நான் கூற விரும்பவில்லை. எனக்கு இரு பணிகள்கொடுக்கப்பட்டன. அதில் கென்யா போட்டியை முடித்துவிட்டேன். அடுத்துஷார்ஜாவில் நடைபெறும் போட்டிக்கு இந்திய அணியைத் தயார் செய்யவேண்டும்.
அப்பணி முடிந்தவுடன் நான் சென்றுவிடுவேன். அதற்குப் பிறகு புதிய பயிற்சியாளரைநியமிக்கவேண்டியது கிரிக்கெட் வாரியத்தின் பணி. ஷார்ஜா போட்டிக்காகவியாழக்கிழமை காலை இந்திய அணி ஷார்ஜா புறப்பட உள்ளது.
வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு அவருக்கு உதவியாக இருக்க நான்விரும்பவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்திய அணிக்கு வெளிநாட்டுப்பயிற்சியாளர் தேவையில்லை என்பதுதான் எனது திட்டவட்ட முடிவும், கருத்தும்ஆகும்.
கென்யா போட்டியின் இறுதி ஆட்டத்தில் டெண்டுல்கர், திராவிட் இருவரும்துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாகிவிட்டனர். அதனால்தான் இந்திய அணியின் ரன்எண்ணிக்கை குறைந்துவிட்டது.
சிறிய மைதானம், வேகமான அவுட் பீல்டு, நல்ல பிட்ச் மற்றும் நல்ல பேட்டிங் வரிசைஇருந்தும் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்கத் தவறிவிட்டது. இதுவேதோல்விக்குக் காரணம்.
ஷார்ஜா போட்டிக்கு ஒரு ஆஃப்-ஸ்பின்னர் வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால்,வாரியம் அதை நிராகரித்துவிட்டது. கென்யா போட்டியில் கலந்து கொண்ட அணியேஷார்ஜா போட்டியிலும் கலந்து கொள்கிறது என்றார் கெய்க்வாட்.
யு.என்.ஐ.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications