ஜோதிபாசுவுக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை
கல்கத்தா:
மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசுவுக்கு வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் கண்ணீர் மல்க பிரிவு உபச்சார விழா நடந்தது.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக முதல்வராக இருந்து சாதனை படைத்தவர் ஜோதி பாசு. இது மார்க்சிஸ்ட் கட்சியின் சகாப்தத்திலேயே மிகப்பெரிய சாதனையாகும்.
ஜோதி பாசு, கடந்த திங்கள்கிழமை தனது ராஜினாமா கடிதத்தையும், பிற பொறுப்புக்களையும் முறையாக, துணை முதல்வர் புத்ததேவ்பட்டாச்சாரியாவிடம் ஒப்படைத்தார்.
பிரிவு உபச்சார தினமான வெள்ளிக்கிழமை ஜோதிபாசு இறுதியாகத் தலைமைச் செயலகத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தார். பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார். இதுதான் முதல்வர் பதவியில் இருந்தபோது அவர்எழுதிய கடைசி அதிகாரப்பூர்வ கடிதம்.
பின்னர் கல்கத்தா பிரஸ் கிளப்பில் நிருபர்களைச் சந்தித்தார். நிருபர்கள் அவருக்கு பேனா மற்றும் மலர் கொத்தை வழங்கினர். அந்தக் காட்சி மிகவும்உணர்ச்சிமயமாக இருந்தது. ஜோதி பாசுவும் உருக்கமாகக் காணப்பட்டார்.
பத்திரிக்கைச் சந்திப்பின்போது, அவர் தனது அரசியல் வாழ்க்கையின் மலரும் நினைவுகளையும், பத்திரிக்கையாளர்களுடன் பேசிய சம்பவங்களையும்நினைவுகூர்ந்தார்.
அவர் பேசுகையில், அரசு மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்காகப் புதிய அரசு செயல்பட வேண்டும். மக்களிடமிருந்துஎதையும் மறைத்து வைக்கும் எண்ணத்தில் அரசியல்வாதிகள் செயல்படக் கூடாது.
நல்லது செய்யும் நோக்கத்தில் புதிய அரசு ஆட்சி புரிய வேண்டும். திரைமறைவு வேலைகளில் ஈடுபடாமல், அரசியல் ஸ்திரத்தன்மையுடன் மேற்குவங்காளத்தில் நல்லாட்சி நடக்க வேண்டும் என்றார்.
பின்னர், தலைமைச் செயலகத்தில் உள்ள ரைட்டர்ஸ் பில்டிங் கில், மாநில அரசு ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொண்டார். இதே இடத்தில்தான் அவர் முதல் முறையாக மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுஅவர் மேற்கு வங்கத்தின் 6-வது முதல்வர் ஆவார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications