அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இந்தியா வருகை
டெல்லி:
அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் உயர் அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை இந்தியா வருவதாக பாதுகாப்பு அமைச்சகம்தெரிவித்துள்ளது.
இந்தியா வரும் பென்டகன் அதிகாரிகள், பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா- அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிப்பார்கள். அமெரிக்கதிட்டமிடுதல் துறை முதன்மை உதவி செயலாளர் ஜேம்ஸ் பாட்னரும், பென்டகன் அதிகாரிகளுடன் வருகிறார்.
1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா, அணு குண்டு வெடித்து சோதனை நடத்தியது. இதையடுத்து இந்தியா மீது அமெரிக்காபொருளாதாரத் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான இரு நாடுகளின் பரிவர்த்தனைகளும் அடியோடு நின்று போனது. இந்த நிலையில், பொருளாதாரத் தடைவிதிக்கப்பட்ட பின், அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவிற்கு வந்தார். அதற்குப் பின் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தளபதிஅட்மிரல் டெனிஸ் பிளேர் உள்பட பல ராணுவ தளபதிகள் இந்தியா வந்தனர்.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகள் சேர்ந்த கூட்டுக் குழு கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில்பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இக்குழு நடவடிக்கை எடுக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications