பிரதமரை இன்று சந்திக்கிறார் கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லியில் பிரதமர்வாஜ்பாயுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
வீரப்பனைப் பிடிக்கும் விஷயத்தில் இரு மாநில அதிரடிப்படையினரும் இணைந்து செயல்படுவது என முடிவுசெய்துள்ளனர். பெங்களூரில் கமாண்டோ படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரு மாநிலங்களையும் சேர்ந்த மொத்தம் 1,320 அதிரடிப்படை வீரர்கள் காட்டில் முகாமிட்டுள்ளனர். இவர்களுக்குஉதவி செய்வதற்காக ராணுவ கமாண்டோ வீரர்களும் களத்தில் இறங்கவுள்ளனர்.
இதுதொடர்பாக, இரு மாநில அரசுகளின் உயர்அதிகாரிகள் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டுத்திரும்பியுள்ளனர். வீரப்பனைப் பிடிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும், செய்ய மத்திய அரசு தயாராகஇருப்பதாக மத்திய அமைச்சர்கள் அத்வானி மற்றும் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர், இந்த அதிகாரிகளிடம்உறுதியளித்துள்ளனர்.
கிருஷ்ணா டெல்லி பயணம்:
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா டெல்லி சென்றுள்ளார். பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள்அத்வானி, ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோரை திங்கள்கிழமை அவர் சந்தித்துப் பேசுகிறார். காலை 11.15 க்குஅத்வானியையும், மாலை 5.45 மணிக்கு பிரதமரையும், கிருஷ்ணா சந்தித்துப் பேசுவார்.
இதற்கிடையே, இந்த வார இறுதியில் கமாண்டோ வீரர்கள், வீரப்பனைப் பிடிக்க காட்டுக்குள் நுழைவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்சம் 100 பேரும், அதிகபட்சம் 500 பேரும் செல்லலாம்.
கமாண்டோ வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன், ஒரு பிரிவினர் மைசூர் வழியாகவும், இன்னொருபிரிவினர் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஈரோடு வழியாகவும் காட்டுக்குள் செல்வார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications