மனைவியுடன் மோதல் .. 11 பேரைக் கொன்று கணவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
சவுதி அரேபியாவில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமுற்ற ஒருவர் 11 பேரைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியான ஜெட்டா நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. கொலையாளியின் குடும்பத்துக்கும், அபார்ட்மென்ட்உரிமையாளருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. மனைவியுடனும் அவருக்குத் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் அதே அபார்ட்மென்ட்டில் வசித்து வந்த, அபார்ட்மென்ட் உரிமையாளர், அவரது மனைவி, 5 குழந்தைகள்,கொலையாளியின் மனைவி, 3 பெண் குழந்தைகள் ஆகியோரை சுட்டுக் கொன்றார்.
11 பேரைக் கொலை செய்தும் வெறி அடங்காத அவர், அங்கிருந்த இரண்டு குழந்தைகளைப் பிணைக் கைதியாகப் பிடித்துச் சென்றார். பின்னர் அந்தக்குழந்தைகளை விட்டுவிட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications