ஜப்பானில் குற்றங்களுக்குப் பின்னால் டீன் ஏஜ் வாலிபர்கள்
டோக்கியோ:
தொழில்நகரமான ஜப்பானில் நடக்கும் கொலை, கொள்ளை, கடத்தல், குண்டுவெடிப்பு போன்ற முக்கியச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும்17 வயதுக்கும் குறைந்த டீன் ஏஜ் வாலிபர்கள்தான் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் டீன் ஏஜ் வாலிபர்களை இது போன்ற மாஸ்டர் மைன்ட் குற்றங்களில் ஈடுபட வைப்பதற்குக் காரணம் பத்திரிக்கைகள், ரேடியோ,தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள்தானாம்.
தான் கேட்டதை தந்தை வாங்கிக் கொடுக்காத காரணத்தால் கோபமடைந்து வெளியே வந்து டோக்கியோ நகர வீதிகளில் சில நாட்களில் சுற்றித்திரிந்து விட்டு அங்கிருந்த வீடியோ கடை ஒன்றில் குண்டு வீசித் தகர்த்தார் ஒரு டீன் ஏஜ் வாலிபர். அதற்குப் பின் தனது வீட்டுக்குப் பக்கத்து வீட்டு முதியவர்ஒருவரை அடித்துக் கொன்று தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார்.
இன்னொருவர் பள்ளி மாணவர் தனது நண்பர்களுடன் கூடைப்பந்து ஆடிய போது அவருக்கும், சக மாணவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால்கோபமடைந்த அவர் தன் வீட்டுக்கு வந்ததும் தன் தாயை அடித்தே கொன்றார். ஏனெனில் தன் தாய் தன் கைச்செலவுக்குப் பணம் தர மறுத்ததால் தன்தாயைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.
சமீபத்தில் 16 வயதே ஆன காதல் ஜோடி டாக்ஸி டிரைவரை அடித்தது தொடர்பாகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டாக்சியில் வந்துகொண்டிருந்து போது, டாக்சி டிரைவரின் பாக்கெட்டிலிருந்து பணத்தைத் திருட முயன்றிருக்கின்றனர். இவர் இதைப் பார்த்ததும் அவர்களை இறக்கி விட்டு விட்டுஅவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
ஜப்பானில் 2000 மாவது ஆண்டில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்ககுநாள் அதிகரித்து வருகிறது. சட்டம் - ஒழுங்கு நிலை சரியாக இருந்தபோதிலும் டீன் ஏஜ் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சகஜமாகி வருகிறது.
1999 ம் ஆண்டு டீன் ஏஜ் வாலிபர்களால் செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 1,042. 2000 மாவது ஆண்டு இவர்களால் செய்யப்பட்ட குற்றங்களின்எண்ணிக்கை 1,063. தற்போது இந்த டீன் ஏஜ் கு ற்றவாளிகள் செய்து வரும் குற்றங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய சமுதாயப் பிரச்சனையாகக்கருதப்படுகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் போலீஸார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications