400 மாணவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
ஆமதாபாத்:
குஜராத்தில் குடியரசு தின விழாவில் பங்கேற்கச் சென்ற பள்ளிக் குழந்தைகள் 400 பேருக்கு மேல் பூகம்பத்திற்கு பலியாகி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் குடியரசு தினத்தன்று கொடியேற்றி முடிந்ததும் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்ற பள்ளிக்குழந்தைகளில் 350 பேர் நிலநடுக்கத்தினால் வீதியின் இருபுறமும் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலியாகினர் என குஜராத் முதல்வர் கேசுபாய்படேல் சனிக்கிழமை தெரிவித்தார். இன்னும் 50 மாணவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
மேலும் மற்றொரு பள்ளியில் குடியரசு தின சிறப்பு வகுப்பிற்கு வந்த மாணவ,மாணவியரில் 65 பேர் பூகம்பத்தினால் பள்ளி கட்டிடம் இடிந்ததில்இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications