நல்ல பட்ஜெட்டாகவே இருக்கும்: மத்திய அமைச்சர்
கோவை:
பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்களடங்கிய பட்ஜெட்டாக இருக்கும் என கோவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பி.கே பட்டேல் புதன்கிழமை தெரிவித்தார்.
கோவையில் புதன்கிழமை மாலை சுதேசிக் காண்காட்சி நிறைவு விழா நடந்தது. இதில் கலந்து காள்ள வந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பி.கேபட்டேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவையில் நடந்த சுதேசிக் கண்காட்சி இளைஞர்களிடையே புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது. சுதேசிப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த சுதேசிக் கண்காட்சியால் புதிய எண்ணங்கள் உருவாகி வருகிறது. இப்போதைய சுதேசிப் பொருள் என்பது சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றியது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி மற்றும் பொருள் குவிப்பிற்கு எதிரான நிலையை இது வலுப்படுத்தும்.
இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், பற்றாக்குறையில்லாதபட்ஜெட் வருங்காலத்தில் ஏற்பட இந்தப் பட்ஜெட் முன்னோடியாக இருக்கும். மேலும், ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம், அடுத்த ஆண்டுகளில் 9சதவீதம் உயர இது வழிவகுக்கும்.
நமது நாட்டு கரன்சிகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 5 ரூபாய் போன்றவை குறைந்த பொருளாதார வசதிகள் கொண்ட மக்களிடம் புழக்கத்தில்இருந்து வருகிறது. எனவே, இந்த நோட்டுக்களை அரசு தடை செய்யும் எண்ணத்தில் இல்லை. மோசமான நிலையில் 5 ரூபாய் நோட்டுக்கள் இருந்தாலும்,அதனை வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்.
இந்த நோட்டுக்களுக்கு மாற்றாக நாணயங்கள் வெளியிடப்படும். ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்கள் அனைத்தும் தைவான், கொரியாபோன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க தேவையான திட்டங்களையும்,ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது என்றார் பட்டேல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications