மூப்பனார்-

Subscribe to Oneindia Tamil

றுசன்னை:

தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக மூத்த தலைவர்கள், வெள்ளிக்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை அவரது வீட்டுக்குச்சென்று சந்தித்துப் பேசினர்.

சுமார் 15 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது.

முதல்வர் கருணாநிதியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத் துறை அமைச்சர்பொன்முடி, சென்னை மேயர் ஸ்டாலின் ஆகியோரும் சென்றிருந்தனர்.

கடந்த சில வாரங்களாக தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று பிஸியாக இருந்த த.மா.கா. தலைவர் மூப்பனார், சில மாதங்களுக்கு முன் உடல்நலமில்லாமல் இருந்தார். அப்போது அவரது பேச்சும் பாதிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு தற்போது பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாககூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து அவர் சோர்வாகவே காணப்படுகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்து வந்த பேட்டிகளில், அவரது பேச்சுதெளிவில்லாமலேயே இருந்து வந்தது.

இதனால் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மூப்பனார். அப்போது கருணாநிதி உள்பட திமுக வினர் அவரை சென்றுசந்தித்தனர்.

மூப்பனாரின் வீட்டுக்குச் சென்ற கருணாநிதி, மூப்பனாரிடம் அவரது உடல்நிலை பற்றி விசாரித்தார்.

இந்தச் சந்திப்பின் போது டெஹல்கா டாட் காம் வெளிக்கொண்டு வந்த ஆயுதப் பேர ஊழல் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூப்பனாருக்கு பேரன் பிறந்தான். இதையடுத்து கருணாநிதி மற்றும் தி.மு.க தலைவர்களுக்கு இனிப்பு வழங்கினார் மூப்பனார்.

இந்தச் சந்திப்பு குறித்து த.மா.கா கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கருணாநிதியும், மூப்பனாரும் நெடுங்கால நண்பர்கள் என்று கூறியுள்ளது.

அ.தி.மு.க வுடன் த.மா.கா தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்ட பிறகு மூப்பனாரும், கருணாநிதியும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+