திமுக - புதிய தமிழகம் பேச்சு தோல்வி?
சென்னை:
புதிய தமிழகம் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே நடந்த தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளதாகத்தெரிகிறது.
திமுக தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகளை முடிவு செய்துவிட்டது. தற்போது சில கட்சிகளே முடிவு செய்யப்பட வேண்டியுள்ளன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புதிய தமிழகம் குழுவினர் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிதலைமையில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர்.
அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். பின்னர் வெளியே வந்த கிருஷ்ணசாமியின் முகம்இறுக்கமாக காணப்பட்டது. அவருடன் வந்தவர்களும் உற்சாகமின்றிக் காணப்பட்டனர்.
வெளியே காத்திருந்த நிருபர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டபோது, கருத்து கூற விரும்பவில்லை என்று மட்டும்கூறி விட்டு கிருஷ்ணசாமி சென்று விட்டார்.
இதன் மூலம் திமுகவுடனான தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தையில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. மீண்டும்கிருஷ்ணசாமியுடன் பேச்சு நடத்தப்படுமா என்பது குறித்து திமுக தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications