த.மா.கா.வுக்கு அடி மேல் அடி
சென்னை:
கடந்த சட்டசபைத் தேர்தலில் தமாகா வெற்றி பெற்ற தொகுதிகளில் 21 தொகுதிகளை தன் வசம் வைத்துக் கொண்டஜெயலலிதா, தற்போது மேலும் 3 தொகுதிகளை தமாகாவிடமிருந்து பறித்து அவற்றை பாமகவுக்குக்கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த முறை வெற்றி பெற்ற 39 தொகுதிகளில் 24 தொகுதிகளை இழந்துள்ளது தமாகா.
வரும் சட்டசபைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 27 தொகுதிகளின் பட்டியலும், இந்திய கம்யூனிஸ்ட்போட்டியிடும் 8 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற 2 தொகுதிகளை அதிமுக எடுத்துக் கொண்டுள்ளது. பிறதொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர அதிமுக போட்டியிடவுள்ள 141 தொகுதிகளில் 21 தொகுதிகள் தமாகா கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதொகுதிகளாகும்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தமாகாவுக்கு 39 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் மயிலாடுதுறைஎம்.எல்.ஏ.அபுல்ஹாசன், நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் ஆகியோர் இறந்து விட்டனர். எம்.எல்.ஏ.சொக்கர்தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இதனால் தமாகா எம்எல்ஏக்களின் பலம் 36 ஆகக் குறைந்துள்ளது. இதில் 21 தொகுதிகளை அதிமுக எடுத்துக்கொண்டுள்ளது. தற்போது மேலும் 3 தொகுதிகளைப் பறித்து பாமகவுக்குக் கொடுத்துள்ளது. அதாவதுதமாகாவிடமிருந்து பூந்தமல்லி, சிதம்பரம், ராதாபுரம் ஆகிய தொகுதிகள் பறிக்கப்பட்டு பாமகவுக்குக்கொடுக்கப்பட்டுள்ளன.
இதனால் கடந்த முறை வெற்றி பெற்ற 24 தொகுதிகளை இழந்துள்ளது தமாகா. இந்தத் தொகுதிப்பங்கீட்டில்பெருமளவு பாதிக்கப்பட்ட கட்சியாக தமாகா கருதப்படுகிறது. இதனால் தமாகா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
வேறு வழி எதுவும் இல்லாததால் ஜெயலலிதா தரும் மிச்சமுள்ள தொகுதிகளை ஏற்றுக் கொண்டாக வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமாகா.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications