பக்தர்கள் மேல் பூமழை பொழிந்த ஹெலிகாப்டர்

Subscribe to Oneindia Tamil

பிரிட்டோரியா (தென் ஆப்பிரிக்கா):

தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு சிவன் கோவிலில் நடந்த விழாவின்போது, ஹெலிகாப்டர் ஒன்று மலர்களைத்தூவி பக்தர்களைப் பரவசம் அடையச் செய்தது.

அந்த கோவிலின் ராஜகோபுரத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுமார் 5,000 பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரிட்டோரியாவின் வடக்குப் பகுதியில் இந்தியர்கள் வாழும் பகுதியான லாடியம் என்ற இடத்தில் அந்த சிவன்கோவில் உள்ளது.

14.5 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் உச்சியில் கலசத்தை வைப்பதற்காக உள்ளூர் தீயணைப்புத் துறை வண்டிகள்பயன்படுத்தப்பட்டன.

இந்து மதப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சித்தரிக்கும் வகையில் ராஜகோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளதுஎன்று கூறினார் லாடியம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா சின்னசாமி.

1960-களில் தமிழர்களால் கட்டப்பட்ட இந்தச் சிவன் கோவில், பல்வேறு விழாக்களின் மூலம் படிப்படியாகவளர்ந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+