தமிழகத்தில் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார் சரத்யாதவ்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
ஐக்கிய ஜனதா தாளம் சார்பில் அதன் தலைவர் சரத் யாதவ் தமிழகத்தில் 3 நாள் பிரச்சாரம் செய்கிறார்.
இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலப் பொதுச் செயலர் ராஜகோபல் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், தமிழகத்தில் 3 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மே. 4, 5, 6 தேதிகளில்அவர் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
ஐக்கிய ஜனதா தாளத்தின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்வார். மே.6ம் தேதி ஒசூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். இவ்வாறு ராஜகோபால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications