எம்.ஜி.ஆர்.ஆட்சியை கொண்டு வர உதவுங்கள்: ஜெ.
கடலூர்:
எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதாக நான் சபதம் ஏற்றுள்ளேன். மக்களாகிய நீங்கள்தான் என்சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெயலலிதா உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் புதன்கிழமை மாலை நடந்த பிரசாரக் கூட்டத்தில்,
1996-லிருந்து கருணாநிதி எனக்கு இழைத்து வரும் அநீதிக்கு அளவே இல்லை. பொய் வழக்குகள் போட்டார்.பொய் சாட்சிகள் பலவற்றை உருவாக்கினார்.
தேர்தல் அதிகாரிகளை மிரட்டி என்னுடைய 4 வேட்புமனுக்களையும் நிராகரிக்கச் செய்தார். இதன்மூலம் அவர்என்னைப் பழிவாங்கத் துடிப்பது நிரூபணம் ஆகிவிட்டது.
கருணாநிதி ஆட்சியில் அரசு நிறுவனங்களுக்குக் கருவிகள் வாங்கியதில் 1000 கோடி ரூபாய்க்கு ஊழல்நடந்துள்ளது. நியாயமான விலையில் மக்களுக்கு சிமெண்ட் கிடைக்கவில்லை.
அனைத்துத் தரப்பு மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்குவதற்குத் துடியாகத்துடிக்கிறார் கருணாநிதி.
தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்.இவர்களுடைய குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
நான் மக்களுக்காகவே என் வாழ்வை அர்ப்பணித்து விட்டேன். மக்களை நம்பித்தான் இருக்கிறேன் என்றுபேசினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications