பிரசாரத்தில் கலக்குகிறார் "சித்தி
கோவை:
சாதனை படைத்த கருணாநிதியின் ஆட்சி வேண்டுமா? அல்லது வேதனையான ஜெயலலிதாவின் ஆட்சி வேண்டுமா என்பதை பொதுமக்கள்முடிவு செய்ய வேண்டும் என "சித்தி ராதிகா கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடிகை ராதிகா திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின்போது அவரைக் காண மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலத் தொடர் "சித்தியில் அவர் நடித்து வருவதால், பிரசாரப் பயணத்தில் அவரைக் காண குழந்தைகளும்பெருமளவில் கூடுகின்றனர்.
குழந்தைகள் அவரை செல்லமாக "சித்தி என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர். பிரபலமான சித்தியின் பிரச்சாரம் திமுகவிற்குஓட்டுக்களைப் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நடிகை ராதிகா, பிரசாரப் பயணத்தின்போது அவர் பேசியதாவது:
மக்களைத் திசை திருப்ப ஜெயலலிதா, மனு நிராகரிக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி வருகிறார். சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டுத்தான் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தலைமைத் தேர்தல் கமிஷனர் கில், சட்ட விதிமுறைகளின் படிதான் ஜெ மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்என்றார் ராதிகா.












Click it and Unblock the Notifications