வெற்றியை நோக்கி இலங்கை அமைதி பேச்சுவார்த்தை
கொழும்பு:
நார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக் சொல்ஹேம் அடுத்த வாரம் இலங்கை அதிபர்சந்திரிகாவை சந்தித்து விடுதலை புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவதுகுறித்து விவாதிக்கவுள்ளார். இம் முறை அவரது முயற்சி வெற்றி பெறக்கூடும் என்றநம்பிக்கை நிலவுகிறது
இந்த மாதம் நடக்கவுள்ள பேச்சு வார்த்தையை எங்கு நடத்துவது என்பது குறித்தும்,பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்தும் இலங்கை அரசு அறிவிக்கும் என்றுஅமைச்சரவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அநேகமாக மேற்கத்தியநாடுகளில்தான் பேச்சு வார்த்தை நடக்கும். வியாழக்கிழமைநடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பேச்சுவார்த்தையில் இலங்கை சார்பில்பங்கு பெறும் பிரதிநிதிகளின் பெயர்கள் முடிவு செய்யப்படும்..
சென்ற வாரம் இலங்கை அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரத்தைவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டான் பாலசிங்கத்தை லண்டனில்சந்தித்த எரிக் சொல்ஹாம் தெரிவித்தார்.
பாலசிங்கம் கூறிய கருத்துக்களை சொல்ஹாம் சந்திகரிகாவிடம் தெரிவிப்பார்.இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இந்தமாதம் 15ம் தேதி துவங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையின் போது சண்டை நிறுத்தம் வேண்டும் என புலிகள் கோரிவருவதும், சண்டை தொடர்ந்து நடக்கும் என இலங்கை அரசு வலியுறுத்தி கூறிவருவதும், நார்வே குழுவின் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிக்கு தடையாக இருந்துவருகிறது.
விடுதலை புலிகள் தாங்கள் அறிவித்திருந்த 4 மாத சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றபின்பு தொடர்ந்த சண்டையில் இலங்கை ராணுவ வீரர்கள் 450 பேர் கொல்லப்பட்டனர்.100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அமைதி பேச்சுவார்த்தைக்காக சண்டை நிறுத்தம் அறிவிக்க முடியாது என கூறிவந்தஇலங்கை அரசு, தற்போது தனது அந்த முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறது.
விடுதலை புலிகளுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும் என்பது குறித்த பல விஷயங்கள் பேச்சுவார்த்தைக்கு தடையாகஇருந்தாலும், புலிகள் சண்டை நிறுத்தம் கோரிவருவதுதான் முக்கியமான தடையாகஇருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் ஊர்வலத்திற்கு தடை:
இந்நிலையில், இலங்கையில் ஒரு வாரத்திற்கு எந்த விதமான ஊர்வலமும்,பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுஅவசரகால நடவடிக்கையாக எடுக்கப்படுகிறது.
சிங்கள அமைப்பான சிங்கள உருமாயா என்ற அமைப்பு முஸ்லிம்ளுக்கு எதிரானநடவடிக்கைகளில் வியாழக்கிழமை ஈடுபடும் என அறிவித்திருதந்ததை தொடர்ந்துஇந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தமாதம் 1ம் தேதி மாவென்னாவில் நடந்த வன்முறை சம்பவத்தின் போதுசேதமடைந்த சிங்களர்களின் உடைமைகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனகோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என தெரியவந்துள்ளது.
எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக முன்னெச்செகித்கைநடவடிக்கையாக இலங்கை அரசு ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை தடைசெய்துள்ளது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications