ஜெ. பொள்ளாச்சியில் போட்டி? மர்மக்கடிதம் ஏற்படுத்திய பரபரப்பு
பொள்ளாச்சி:
எம்.எல்.ஏ. ஆவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பொள்ளாச்சி தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என பல அ.தி.மு.க.பிரமுகர்களுக்கு வந்துள்ள மர்ம கடிதம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியிலிலிருக்கும் அனைத்து காவல் நிலையங்களுக்கும், டி.எஸ்.பி. அலுவலகங்களுக்கும், முக்கிய அ.தி.மு.க.பிரமுகர்களுக்கும் சில நாட்களாக மர்ம கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தக் கடிதங்களில் கருணாகரன் என கையெழுத்திடப்பட்டுள்ளது. ஆனால் யார் இவர், எங்கிருந்து கடிதத்தை அனுப்பினார்என்பது போன்ற விவரங்கள் அந்தக் கடிதங்களில் இல்லை.
கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயராமன் வாக்காளர்களுக்கு நன்றி கூற வரவில்லை.
ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத தொழிலதிபர்களை அவர் சந்திதுள்ளார். கொப்பரை தேங்காய் கொள்முதலில் ஊழல் செய்தவியாபாரி பாலு மற்றும் குவாரி ஒப்பந்தக்காரர்களை சேர்த்துக் கொண்டு கொள்ளையடித்துளளார்.
இந்த விவரங்கள் "அம்மா"வுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. இதனால் இவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அ.தி.மு.க.வில் நிலவி வரும் கோஷ்டி பூசலைத் தவிர்ப்பதற்காகவும் எம்.எல்.ஏ. ஆவதற்காகவும் முதல்வர்ஜெயலலிதா பொள்ளாச்சியில் போட்டியிடவிருக்கிறார்.
இப்படிக்கு,
கருணாகரன்
என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
தேர்தல் சமயத்திலும் இது போல் மர்ம கடிதம் வந்து பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த மர்மகடிதம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடிதத்தை எழுதியவரை கண்டுபிடிக்குமாறு போலீசாரை அ.தி.மு.கவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த மர்ம கடிதம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயராமன் கூறுகையில், எனக்கு இப்போது நேரம் சரியில்லை எனநினைக்கிறேன். எனக்கு எதிராக யாரோ வேண்டுமென்றே சதி செய்து தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதை எவ்வாறுதடுப்பது என தெரியவில்லை. இந்தக் கடிதத்தில் ஆபாசமான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. உண்மை ஒரு நாள் வெளிவரும்என்றார்.


Click it and Unblock the Notifications
