காங்கிரஸ்-த.மா.கா. இணையுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், தமிழக காங்கிரஸ் கட்சியும் இணைந்துவிடும் என்ற எண்ணம் நிலவிவரும் நிலையில், இரு கட்சிகளின்தலைமையிலும் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் மீண்டும் கோஷ்டி பூசல் தலைதூக்கியுள்ளது. கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இளங்கோவனை நீக்கவேண்டும் என்று 12 தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த காங்கிரஸ் தலைவர்கள் தவிர, பல முன்னாள் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், தலைமை பகுதியிலிருந்து இளங்கோவன் நீக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம், முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன்,எல்.அடைக்கலராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

காங்கிரசிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் ஆரம்பித்தவுடன், இவர்கள் அதில் இணைந்தனர். ஆனால், அவர்கள்கடந்த தேர்தலுக்கு முன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். காங்கிரசில் மீண்டும் இணைந்த போதிலும், இளங்கோவன் தலைமையை அவர்கள்விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

தனது தலைமையை எதிர்ப்பவர்கள் குறித்து இளங்கோவன் கூறுகையில், அடைக்கலராஜ் தி.மு.க.வுடன் மறைமுகத் தொடர்பு வைத்துள்ளார்.இதன் காரணமாகவே, கடந்த தேர்தலில், 2 இடங்களில் தி.மு.க.விடம் காங்கிரஸ் தோற்றுவிட்டது. விரக்தியடைந்த கூட்டம்தான் என்னைஎதிர்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.

காலம் சென்ற முன்னாள் தமிழக முதல்வரும், காங்கிரசின் முதுபெரும் தலைவருமான காமராஜரின் பிறந்த நாள் விழா அடுத்த மாதம் 15ம்தேதி நடைபெறும் என இளங்கோவன் அறிவித்துள்ளார். இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி,த.மா.கா. தலைவர் மூப்பனார் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த சமயத்தில் காங்கிரஸ்-த.மா.கா. இணைப்பு பற்றி சோனியாவும், மூப்பனாரும் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின், த.மா.கா.வின் செயற்குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை கூடியது.அப்போது காங்கிரஸ்-த.மா.கா. இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

ஆனாலும், இரு கட்சித் தலைவர்களுமே காங்கிரஸ்-த.மா.கா.இணைவதற்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லை என மறுத்து வருகின்றனர்.த.மா.கா. செயற்குழு கூட்டத்தில் இது பற்றிப் பேசவே இல்லை என்று சாதிக்கிறார் மூப்பனார்.

தமிழக காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை மூப்பனார் ஏற்றால் மட்டுமே, அக்கட்சியில் நீடித்துவரும் கோஷ்டிப் பூசல்கள் நீங்கும் என்றுஅரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஆனால் மூப்பனார் இதை ஏற்க மறுக்கிறார்.

காங்கிரஸ்-த.மா.கா. இணைவதற்கான வாய்ப்பில்லை என மூப்பனார் எப்போதும் கூறவில்லை என்று த.மா.கா. செய்தித் தொடர்பாளர்ஞானதேசிகன் கூறியுள்ளார். இதுவே இரு கட்சிகளும் இணைந்துவிடும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியுள்ளது.

த.மா.கா. பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம். மூப்பானருக்கு 72 வயதாகி விட்டது. அவரது உடல்நிலையும் நன்றாக இல்லை என்றகாரணத்தால் த.மா.கா.விற்குப் புதிய தலைமை வேண்டும் என அக்கட்சியினர் நினைக்கிறார்கள்.

இதனால், மூப்பனாருக்குப் பதிலாக அவரது மகன் கோவிந்தவாசனைத் தலைவராக்கும் முயற்சி நடந்து வருகிறது. நடந்து முடிந்த த.மா.கா.செயற்குழுக் கூட்டத்தில், மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன் தலைமை பொறுப்பை ஏற்பதை 400 பேர் வரவேற்றுள்ளனர்.

த.மா.கா.-காங்கிரஸ் இணையுமா? இரு கட்சிகளின் தலைமைகளில் மாற்றம் ஏற்படுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விரைவில் விடைகிடைத்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+