தமிழுக்கு கலைஞர் என்றும் பேர்!
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெள்ளிக்கிழமைநள்ளிரவு போலீசரால் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்படும் போது போலீசார் நடந்து கொண்ட விதம் தமிழகத்தை மட்டுமல்லாமல்,இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மிக மூத்த இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி 1923ம் ஆண்டு மே மாதம்தமிழ்நாட்டில் தஞ்சாவூருக்கு அருகே திருவாரூரில் பிறந்தவர். திராவிடகொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தனது 17வது வயதிலேயே அரசியலில் சேர்ந்தார்.
கருணாநிதியின் அரசியல் ஆர்வத்திற்கு வித்திட்டவர்கள் திராவிட கழக நிறுவனதலைவரான பெரியார் என எல்லோராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியும்,அண்ணா என் எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அண்ணாதுரை ஆகியோர்.
அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பலம் வாய்ந்த கட்சியாக இருந்துவந்தது. அப்போது திராவிட கழகம் காங்கிரசுக்கு மாற்றாக தமிழகத்தில் வேகமாகவளர்ந்து வந்தது.
ஆனால் 1949ம் ஆண்டு பெரியார் மிக இளம் வயது கொண்ட பெண்ணை மணந்துகொண்டதால் திராவிடர் கழகம் உடைந்தது. அண்ணா தலைமையில் திராவிடமுன்னேற்ற கழகம் (தி.மு.க.) என்ற பெயரில் புதிய கட்சி உதயமானது.
கருணாநிதி தனது பேச்சால் மக்களை கவர்ந்திழுத்ததால் விரைவிலேயே அவர்தி.மு.கவில் முக்கிய தலைவரானார். அவர் தமிழ் திரைப்படங்களும் கதைவசனம் எழுதிவந்தார். அவர் முரசொலி நாளிதழின் ஆசிரயராகவும் இருந்து வந்தார். அந்தபத்திரிக்கை தற்போது தி.மு.க.பிரச்சார பத்திரிக்கையாக இருந்து வருகிறது.
1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். என்றழைக்கப்படும் எம்.ஜி.ராமசந்திரனை அரசியலுக்குகொண்டு வந்தார் கருணாநிதி.
1960ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு இணையாக வளர்ந்தார். 1967ம் ஆண்டுதி.மு.க தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அண்ணா முதல்வரானார். கருணாநிதி முதல்முதலாக அமைச்சர் பொறுப்பேற்றார்.
ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அண்ணா இறந்து விட்டார். இதையடுத்துகருணாநிதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். தி.மு.கவின் தலைவராகவும்பொறுப்பேற்றார்.
கருணாநிதி முதன் முதலாக 1969ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். அவர்இரண்டு முறை முதல்வராக இருந்தார். 1976ம் ஆண்டுவரை அவர் முதலவராகஇருந்தார்.
கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்த எம்.ஜி.ஆர். அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் (அ.தி.மு.க.) என்ற கட்சியை தொடங்கினார். அவர் 1977ம் ஆண்டுநடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் 1989ம் ஆண்டு வரை (இறக்கும் வரை)அவர்தான் தமிழக முதல்வராக இருந்தார்.
எம்.ஜி.ஆர் முதல்வராகப் முதன் முறையாகப் பதவியேற்ற பின்பு கருணாநிதி சிறையில்அடைக்கப்பட்டார். ஆனால் கருணாாநிதியை கைது செய்ய வந்த போலீசார்மரியாதையாக நடந்து கொண்டதாக கருணாநிதி ஆதரவாளர்கள் இன்னமும் ஒப்புக்கொள்கின்றனர்.
இந்திரா காந்தி 1976-77ம் ஆண்டு எமர்ஜென்சியை பிரகடனப்படுத்திய போதுகருணாநிதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருணாநிதி மீண்டும் 1989ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அவர்விடுதலை புலிகளுக்கு ஆதரவளித்ததாக கூறி அவரது அரசு 1991ம் ஆண்டுகலைக்கப்பட்டது.
அதே ஆண்டில் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அணிவெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவிஏற்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications