கருணாநிதி மீதான அராஜகம்: ஜனாதிபதி- வாஜ்பாய் ஆலோசனை
டெல்லி:
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை போலீசார் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுடன் பிரதமர் வாஜ்பாய் சனிக்கிழமை மாலை ஆலோசனைநடத்தினார்.
முன்னதாக கருணாநிதிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து கடும் கோபமடைந்த வாஜ்பாயை தமிழக தலைமைச்செயலாளரை தொலைபேசியில் அழைத்து மிகக் கோபாமாகப் பேசினார்.
கருணாநிதியின் வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து எனக்கு முழு விவரம் அளிக்க வேண்டும். என்னுடன்தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஆட்சியைக் கலைக்க கோரிக்கை:
மத்தியில் திமுகவின் ஆதரவில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி கடும் கோபமடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனவும் தீவிர கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், அரசியல்சட்டத்தின் 356வது பிரிவின் கீழ் மாநில அரசின் ஆட்சியைக் கலைத்தால் அது தொடர்பான தீர்மானத்தைநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும்.
ஆனால், ராஜ்யசபாவில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. அங்கு அந்த தீர்மானத்தை நிறைவேற்றகாங்கிரஸ் ஆதரவு வேண்டும். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. எனவே,ஜெயலலிதா அரசுக் கலைப்புக்கு காங்கிரஸ் அனுமதி அளிக்காது.
இந் நிலையில் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications