மத்திய அரசு கூர்ந்து கவனிக்கிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தி..மு,க.தலைவர் கருணாநிதியை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையிலும், மத்தியஅரசு தமிழக அரசின் நடவடிக்கைகைளை கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது போலீசார் அவரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டனர். போலீசார்நடந்து கொண்ட விதமும், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதும் மத்திய அரசின் கடும் கண்டனத்திற்குஉள்ளானது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யபட்டிருந்த மத்திய அமைச்சர்கள் மீதான வழக்குகளைதமிழக அரசு வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்தது.

தமிழக அரசின் மீது எந்த விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து செவ்வாய்க்கிழமை கூடிய மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசுக்கு எச்சரிக்கை மட்டும் விடுத்த மத்திய அரசு,முரட்டுத்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டது.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், மனிதாபிமான அடிப்படையிலும் அவரைவிடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் கருணாநிதி மீதுள்ள வழக்குகள்தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியபோது:

நாங்கள் வழக்கு போடப்பட்டது பற்றியோ, கைது செய்யப்பட்டது பற்றியோ கேள்வி எழுப்பவில்லை. போலீசார்நடந்து கொண்ட விதம் பற்றிதான் கேள்வி எழுப்பினோம். கண்டனம் தெரிவித்தோம்.

இப்போது கருணாநிதியை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் மத்திய அரசு தமிழகநிலையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.

டெல்லியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், மத்திய அரசின் கோபப் பார்வையிலிருந்து தப்புவதற்கும்,அவர்கள் கடும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதற்காகவும்தான் கருணாநிதியை விடுதலை செய்யஜெயலலிதா முடிவு செய்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+