யாழ் பல்கலைக் கழகம் திறப்பு-நிபந்தனைகளை ஏற்க மாணவர்கள் மறுப்பு
யாழ்ப்பாணம்:
கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணத் தமிழ்ப்பல்கலைக்கழகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
மாணவர்கள் தொடர்ந்து போராடவே, திவ்வியன் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் படிஇன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாணவர்கள் மற்ற மாணவர்களை போராட தூண்டக்கூடாது, நிர்வாகத்திற்குக் கட்டுப்பட வேண்டும்,மற்ற மாணவக்ளின் கல்வி மற்றும் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதபடி நடந்து கொள்ள வேண்டும் போன்றநிபந்தனைகளில் கையெழுத்து இடவேண்டும் என்று நிபந்தனை வைத்திருந்தது பல்கலைக்கழக நிர்வாகம்.
இதுபற்றி இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,
நிர்வாகம் விதித்த நிபந்தனைகளை ஏற்காததோடு, அதில் கையெழுத்துமிடவில்லை. தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுப்பது எங்கள் உரிமை. அடிமையாக இருந்து கொண்டு கல்விகற்பதை விட, போராட்டத்தில் இறங்கிகொடுமைகளை எதிர்ப்பதே மேல் என்றார்.












Click it and Unblock the Notifications