மாவட்டந்தோறும் பெண் குற்றவாளிகளுக்கு தனி சப்-ஜெயில்
பொள்ளாச்சி:
ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்குத் தனியாக சப்-ஜெயில் ஒதுக்கப்படும் என்று கோவை மத்திய சிறைடி.ஐ.ஜி. பி.எம். எஸ்றா கூறினார்.
பொள்ளாச்சி சப்-ஜெயிலில் வருடாந்திர ஆய்வுப் பணி மேற்கொள்ள எஸ்றா பொள்ளாச்சிக்கு வந்தார். அப்போதுஅவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை சரகத்தில் கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்கள் அடங்கியுள்ளன.இதில் கோவையிலும், சேலத்திலும் மத்தியச் சிறைச்சாலைகள் உள்ளன. மேலும் 28 சப்-ஜெயில்களும் இந்தச்சரகத்தில் உள்ளன. ஒரு திறந்தவெளி ஜெயில் சிங்காநல்லூரில் உள்ளது.
ஜெயில்களில் கைதிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரமுயற்சிப்பது பாராட்டுக்குரியது. மேலும் சிறையில் இருந்துகொண்டு பட்டப்படிப்பு படிக்கும் கைதிகளுக்குதண்டனையைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இளம்பெண் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுவருகிறது. இதற்குக் காரணம் இந்தப் பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதுதான் தொழிலாக இருக்கிறது.
வேறு தொழில் இல்லாததால் இதைச் செய்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து அரசு பரிசீலித்துமுடிவெடுக்கும்.
தற்போது ஆண், பெண் இருபாலருக்கும் ஜெயில் ஒன்றாகத் தான் உள்ளது. பெண் கைதிகள் அதிகமாகி வருவதால்,இருக்கும் சப்-ஜெயில்களில் மாவட்டத்திற்கு ஒரு சப்-ஜெயில் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications