மாபெரும் போராட்டம் நடத்துவோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து திங்கள்கிழமை இரவு நிருபர்களிடம் திமுக தலைவர் கருணாநிதிபேசியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிமுகவினர் முறைகேடுகள், அராஜகங்களில்ஈடுபட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களைக் கைப்பற்றிக் கொண்ட அதிமுகவினர் உள்ளே இருந்தவேட்பாளர்களின் ஏஜென்டுகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். பின்னர் அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளைமிரட்டி தங்களுக்குச் சாதகமாக ஓட்டுக்களை எண்ணக் கூறியுள்ளனர்.

திருவான்மியூர் 154வது வார்டில் போட்டியிட்ட கராத்தே தியாகராஜன் 500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தோல்வியுற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றுதேர்தல் அதிகாரிகளை அவர் மிரட்டியுள்ளார். அவரது அராஜகத்தைத் தாங்க முடியாமல்தான் அவர் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எனவே சென்னை நகரில் இதுபோன்று அராஜகம் நடந்த, முறைகேடு நடந்த 9 வார்டுகளில் மீண்டும் வாக்குகளைமுறையாக எண்ண வேண்டும், தேவைப்பட்டால் மறு தேர்தலே நடத்த வேண்டும்.

ஸ்டாலின் உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீஸார் அனுமதி தரவில்லை. நாங்களும் தரவில்லை. இது ஸ்டாலின்சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. பல மாநகராட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள்பறிக்கப்பட்டுள்ளன.

இதை பெரிய அளவில் செய்ய வேண்டும், மாபெரும் போராட்டமாக இதை நடத்த வேண்டும். ஜனநாயகத்தைகொலை செய்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இப்போது அதை பலாத்காரப்படுத்தி,மானபங்கப்படுத்தி விட்டார்கள் என்றார் கருணாநிதி.

பேட்டியின்போது உடனிருந்த பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், பாரதீயஜனதாக் கட்சி சார்பில் ஆளுநரிடம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் கூறியுள்ளோம். இதுதொடர்பாக பிரதமர்,உள்துறை அமைச்சரிடம் புகார்கூறினாலும் கூட அவர்கள் ஆளுநரிடம்தான் சொல்கிறார்கள்.

மேலும் தேர்தல் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி இப்படித்தான்நடந்து கொள்வோம் என்ற அடாவடிப் போக்கை ஆளும் கட்சி கடைப்பிடித்து வருவது வேதனைக்குரியது என்றார்இல. கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+