3,00,000 to

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த மாநகராட்சித் தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஸ்டாலின் இம்முறை வெறும் 5,000வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயராக மீண்டும் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் ஸ்டாலினுக்கும்,அதிமுக வேட்பாளர் பாலகங்காவுக்கும் இழுபறி நிலை இருந்து வந்தது.

பிறகு நேற்று (திங்கள்கிழமை) இரவு 2.30 மணியளவில் சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் ஸ்டாலின்மீண்டும் வெற்றிபெற்றதாக, சென்னை மாநகராட்சிக் கமிஷனரும், சென்னை தேர்தல் அதிகாரியுமான ஆச்சார்யலுஅறிவித்தார்.

இறுதி வாக்குகள் விவரம்:

ஸ்டாலின் (திமுக) - 5,68,451

பாலகங்கா (அதிமுக)- 5,63,438

வசந்தகுமார் (காங்கிரஸ்)- 1,02,696

ஸ்டாலின் 5, 013 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். கடந்த முறை நடந்த மேயர் தேர்தலில்வெற்றிபெற்ற போது 3,20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்கும் தயார் - ஸ்டாலின் பேட்டி:

வெற்றிபெற்ற பின்பு ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தவெற்றியைப் பெற்றுள்ளேன். மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் எந்த சவாலையும் சந்திக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.

சென்னை மாநகராட்சி வார்டுகளில் அதிமுக 67 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

மேலும் தமாகா 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. திமுக 61 இடங்களையும், பாரதிய ஜனதா 3 இடங்களையும்கைப்பற்றியுள்ளன.

மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தையும், காங்கிரஸ் 2இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி மன்றத்தில் அதிமுகவின் பலம் அதிகமாக இருப்பதால் அவையை நடத்துவதில்ஸ்டாலினுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+