ஹெலிகாப்டர் நொறுங்கி 4 அமெரிக்க ராணுவத்தினர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கிவிழுந்ததில், அதிலிருந்த 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானுக்குள்ளேயே அந்த ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதாகவும், ஆனால் அது தீப்பிடித்து எரிந்துபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண எல்லைக்குள் விழுந்து விட்டதாக அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்கூறினார்.

நொறுங்கிய ஹெலிகாப்டரின் சிதைவுப் பகுதிகளை அல்-ஜசீரா தொலைக்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை)காலை வெளியிட்டது.

ஆனால் அமெரிக்க ஹெலிகாப்டர் எதுவும் விபத்தில் சிக்கவில்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமானபென்டகன் இன்று கூறியுள்ளது.

இதற்கிடையே தாங்கள்தான் இந்த ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

நார்த்தர்ன் அலையன்ஸ் பிடியில் மேலும் ஒரு மாவட்டம்

இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து வடக்குஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டத்தை தலிபான்களிடமிருந்து நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்கைப்பற்றியுள்ளனர்.

மசார்-ஏ-ஷெரீப் நகரிலிருந்து தென்மேற்கே 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஸாரி என்ற அந்த மாவட்டத்தின்பெரும்பகுதி ஏற்கனவே நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் வசம்தான் இருந்தது.

இந்நிலையில் மீதிப் பகுதிகளில் இருந்த தலிபான்கள் மீது நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் நேற்று இரவு திடீர்த்தாக்குதல் நடத்தினர். தலிபான் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரவு முழுவதும் இரு படையினருக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதையடுத்து இன்று அதிகாலை ஸாரிமாவட்டம் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தற்போது தலிபான்களின் கைவசத்தில் இருக்கும் மசார்-ஏ-ஷெரீப் நகரைத் திரும்பவும் கைப்பற்றும்முயற்சியில் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் முழு மூச்சில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+