சென்னையில் 30 கிலோ ஹெராயின் பறிமுதல் - 2 இலங்கைத் தமிழர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் 30 கிலோ ஹெராயின் வைத்திருந்ததாக இரண்டு இலங்கைத் தமிழர்களை போதைப் பொருள் தடுப்புபோலீசார் கைது செய்தனர்.

அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு ஹெராயின் கடத்தப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, போதைப் பொருள்தடுப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதற்கென அமைக்கப்பட்ட தனிப் படையைச் சேர்ந்த போலீசார், பிராட்வே பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில்ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த லாட்ஜிலிருந்த முகம்மது ஜியாத் (37) என்பவர் இரண்டு பார்சல்களை அன்னா குமார் (39)என்பவரிடம் கொடுக்க முயன்றார். உடனே அவர்கள் இரண்டு பேரையும் தனிப் படை போலீசார் சுற்றி வளைத்துகைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பார்சலில் 29.625 கிலோ அளவுக்கு ஹெராயின் இருந்தது. இதன் மதிப்புரூ.30 கோடியாகும்.

கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கைத் தமிழர்கள் ஆவர். அகமதாபாத்திலிருந்து இலங்கைக்கு ஹெராயினைக்கடத்த முயன்றபோதுதான் இவர்கள் இருவரும் பிடிபட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெராயின் மிகவும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருப்பதால், போதைக்காக அதைஉபயோகிப்பவர்கள் உடனடியாக இறக்கும் அளவுக்கு அதில் விஷத் தன்மை உடையது என்பது தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+