லண்டன் ஓட்டல், நிலக்கரி வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான லண்டன் ஓட்டல் வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து,அந்த வழக்கை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் 2 ஓட்டல்கள் வாங்கி விற்றதன்மூலம் ரூ.43 கோடி வரை சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதா மற்றும்தினகரன் எம்.பி. ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குதொடர்பான குற்றப்பத்திரிக்கை ஏற்கனவே சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, ஜெயலலிதாவுக்கும், தினகரனுக்கும் 2 முறை சம்மன் அனுப்பஉத்தரவிடப்பட்டது. ஆனால் சம்மன் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. மூன்றாவது முறை ஜெயலலிதா மற்றும்தினகரனிடம் சம்மன் நேரில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமக்கு வழங்கப்பட்ட சம்மனைரத்து செய்யக் கோரினார்.

இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன் விசாரித்து வருகிறார். விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றுமற்றொரு மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும்,நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து, ஜெயலலிதாவுக்கு விலக்களிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை), இவ்வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அந்த வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி அசோக்குமார்.

நிலக்கரி ஊழல் வழக்கு

நிலக்கரி ஊழல் வழக்கிலும், வக்கீல்கள் வாதம் வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரிஇறக்குமதி செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.6.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கண்ணப்பன் மற்றும் பல அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், முன்னாள் மின்வாரியத் தலைவர்ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பிலும் சாட்கிள் விசாரிக்கப்பட்டு விட்டனர். வக்கீல்கள் வாதம் நேற்று (திங்கள்கிழமை)தொடங்கும் என்று வழக்கை விசாரித்த இரண்டாவது தனிநீதிமன்ற நீதிபதி தார்வேஸ் உத்தரவிட்டார்.

நேற்று வழக்கு விசாரணக்கு வந்தபோது, அரசுத்தரப்பு வக்கீல் சந்திரன் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, வழக்கைவரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தார்வேஸ் தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+