கிரிக்கெட்: தெ.ஆ. டூரை பாதியில் முடிக்கிறது இந்தியா?
கொல்கத்தா:
தென் ஆப்பிரிக்காவுடனான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து நடுவர் மைக் டென்னசை நீக்க வேண்டும் என்றஇந்தியாவின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்க மறுத்ததையடுத்து, தென் ஆப்பிரிக்கசுற்றுப் பயணத்தை இந்திய கிரிக்கெட் அணியினர் முடித்துக் கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது.
நடுவரிடம் தொடர்ந்து அப்பீல் செய்த காரணத்திற்காக, மேலும் ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் மைக்டென்னசால் தண்டிக்கப்பட்டுள்ளனர். தண்டனைக்குள்ளான அனைவருடைய சம்பளத்திலும் 75 சதவீதம்பிடிக்கப்படும்.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை பற்றி ஐ.சி.சி மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் போர்டு வேண்டுகோள் விடுத்தது.
மேலும் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே வரும் வெள்ளிக்கிழமை துவங்கவிருக்கும் 3வது டெஸ்ட்போட்டியில் மைக் டென்னசை நடுவராக நியமிக்கக் கூடாது என்றும் இந்திய கிரிக்கெட் போர்டு வேண்டுகோள்விடுத்திருந்தது.
ஆனால் இக்கோரிக்கைகளை ஐ.சி.சி. ஏற்க மறுத்துவிட்டது. ஐ.சி.சியால் நியமிக்கப்பட்ட நடுவரின் தீர்ப்பைநீக்கவோ, மறு பரிசீலனை செய்யவோ முடியாது என்றும் அது கூறிவிட்டது.
இதையடுத்து, இந்திய அணி தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியினர் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தை உடனடியாக முடித்துக் கொண்டு இந்தியாதிரும்புவார்களா என்பது குறித்த இறுதி முடிவை இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியா இன்று(வியாழக்கிழமை) அறிவிப்பார்.
தென் ஆப்பிரிக்கா அதிருப்தி
ஆனால் இந்திய அணி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொள்வதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டுவிரும்பவில்லை.
3வது டெஸ்டில் மைக் டென்னசை நியமிக்கக் கூடாது என்ற இந்தியாவின் நிலைக்கு நாங்களும் ஆதரவளிப்போம்என்று கூறியுள்ள தென் ஆப்பிரிக்கா, இந்தியா சுற்றுப் பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மைன் டென்னசை நீக்க வேண்டும் என்று இரு போர்டுகளும் இணைந்து ஐ.சி.சியைக் கேட்கப் போவதாகவும்முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், 3வது டெஸ்டில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவிக்கும் நிலையில், நட்பு ரீதியிலாவது இந்தியஅணியினர் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரு ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு கோரியுள்ளது.
இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் போர்டின் தற்போதைய நிலைக்கு தன்னுடையஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சங்கத் தலைவர் ஜெனரல் தாக்கிர் ஜியாவுடன் டால்மியா நேற்றுடெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
நடுவர் மைக் டென்னசின் இரட்டை நிலையை ஜியா கடுமையாகக் கண்டித்து டால்மியாவிடம் பேசியுள்ளார்.இந்திய கிரிக்கெட் போர்டுக்குத் தங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்றும் ஜியா கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புதிய உறவு தோன்றியுள்ளதாகத் தெரிகிறது. இரு நாட்டுஅணியினரும் ஒருவருக்கொருவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிறைய ஆண்டுகளாகிவிட்டன.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications