சேலத்தில் வீரப்பன் ஆதரவு கன்னியாஸ்திரி கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சந்தனக் கடத்தல் வீரப்பனை ஆதரிக்கும் துண்டு பிரசுரங்களுடன் தமிழ் தீவிரவாத ஆதரவு பெண் ஒருவர் சேலத்தில்போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரிலிருந்து தமிழகத்திற்குள் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக வந்த புகாரையடுத்து போலீசார்சேலம் பர்ன் அண்ட் கோ நிறுவனம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பஸ்ஸில் வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது, போலீசாரைப்பார்த்தவுடன் ஒரு பெண் தான் வைத்திருந்த அட்டைப் பெட்டியை மறைத்தார்.

இதனால் சந்தேக மடைந்த போலீசார் அந்தப் பெண் வைத்திருந்த பெட்டியைத் திறந்து பார்த்தனர்.

அதில் "யாரடா அவன் சந்தன வீரப்பனாரை சரணடையச் சொல்பவன், இப்படிக்கு பொய்யா மொழிப்புலவர்" என்றவாசகங்கள் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பிட் நோட்டீஸ்கள் இருந்தன.

இதையடுத்து அந்தப் பெண்ணைக் கைது செய்து சூரமங்கலம் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். அங்குஅந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரங்கள் வருமாறு,

அவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரின் மகள் வனச்செல்வி. அவர் ஒருகிருஸ்தவ கன்னியாஸ்திரி. கடந்த 12 ஆண்டுகளாக கன்னியாஸ்திரியாக இருந்துகொண்டு தூத்துக்குடியில்சேர்வைட்ஸ் என்ற பெயரில் ஒரு கான்வென்ட் நடத்தி வருகிறார். இதற்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவியும்வருகிறது.

தமிழ் மீதும், தமிழர்கள் நலன் மீதும் மிகுந்த பற்றுடையவர்.வரலாற்றுப் பாடத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.பெங்களூரில் சேஷாபுத்ரிபுரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறார்.இதற்காக இவர் அடிக்கடி பெங்களூர் செல்வது வழக்கம்.

பெங்களூரில் உள்ள தமிழர் விடுதலைப் பாசறையில் உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழக அரசுக்கும், முன்னாள்முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதைவழக்கமாகக் கொண்டுள்ளார் வனச்செல்வி.

இவரிடம் தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் தவிர, மத்திய அரசின் இன்டலிஜென்ஸ் பீரோ அதிகாரிகளும்விசாரணை நடத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+