நெல்லையில் கர்ப்பிணிப் பெண் மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுச்சாமி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு1 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் மல்லிகா மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் தனது குழந்தையை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு புதன்கிழமை மல்லிகா வெளியே சென்றார்.ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே, தனது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கிணற்றில்மல்லிகா பிணமாக மிதந்தார்.
போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மல்லிகா தற்கொலைசெய்துகொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications