காணும் பொங்கல்: மெரீனாவில் குவிந்த மக்கள்
சென்னை:
காணும் பொங்கல் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. மெரீனா கடற்கரை முழுவதிலும் எங்குபார்த்தாலும் மக்கள் அலையே காணப்பட்டது.
பொங்கல் திருநாளின் நிறைவு நாளை காணும் பொங்கலாக தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். தென்மாவட்டங்களை விட வட மாவட்டங்களில்தான் இந்த காணும் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
புத்தாடை அணிந்து, குடும்பத்தோடு பொழுது போக்கு இடத்திற்குச் சென்று சந்தோஷமாக பொழுதைக் கழிப்பதும்,பலதரப்பட்ட மக்களைக் காணுவதுமே இந்த காணும் பொங்கலின் நோக்கம்.
அதன்படி புதன்கிழமை காலை முதலே சென்னை மக்கள் வீடுகளை விட்டு குடும்பத்தோடு சாரை சாரையாகவெளியேறத் தொடங்கி விட்டனர்.
கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம், பெசன்ட் நகர் கடற்கரை, மெரீனா கடற்கரை, வி.ஜி.பி கோல்டன்பீச், எம்.ஜி.எம், கோவளம் கடற்கரை, கிஷ்கிந்தா, மாமல்லபுரம் என எங்கெல்லாம் பொழுதுபோக்கு இடங்கள்இருக்கிறதோ அங்கெல்லாம் செல்லத் தொடங்கினர்.
கடைசியாக அவர்கள் வந்து சேர்ந்த இடம் மெரீனா கடற்கரைதான். மாலை 4 மணிக்கு மேல் மெரீனாவில் எங்குபார்த்தாலும் மக்கள் தலைகள்தான். காமராஜர் சாலையிலிருந்து பார்த்தாலே கடல் தெரியும் நிலை மாறி கடலையேமறைக்கும் அளவுக்கு மக்கள் தலைகள் ஆக்கிரமித்திருந்தன.திருவிழாக் கூட்டமாக திரண்டிருந்த சென்னை மக்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டும், விற்றுக்கொண்டிருந்த திண்பண்டங்களை "ஒரு கை பார்த்தும்" காணும் பொங்கலை களிப்புடன் அனுபவித்தனர்.
காணும் பொங்கலையொட்டி மெரீனா கடற்கரை வரை பல சிறப்பு பேருந்துகள் பல பகுதிகளில் இருந்தும்இயக்கப்பட்டிருந்தன. அப்படியும் பயணிகள் நெரிசல் கட்டுக்கடங்காமல் இருந்தது. எப்போதும் "காத்தாடும்"கடற்கரை-மயிலாப்பூர் மாடி ரயில்களிலும் கூட்டம் அலை மோதியது.
காணும் பொங்கலையொட்டி சென்னை நகரில் வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகள்ஆகியவற்றிற்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்களுக்கும் ஏற்கனவே விடுமுறைவிடப்பட்டிருந்தது.
காணும் பொங்கலுடன் 3 நாள் பொங்கல் விழாவை சென்னை மக்கள் முடித்துக் கொண்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications