திமுக வழக்கு மீண்டும் தள்ளுபடி: ஆண்டிப்பட்டி தேர்தல் நிச்சயம் நடக்கும்
டெல்லி:
ஆண்டிபட்டியில் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனு இன்று (புதன்கிழமை) தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து நாளை திட்டமிட்டபடி தேர்தல் நிச்சயம் நடக்கும்.
ஆண்டிப்பட்டியில் 17,000 போலி வாக்காளர்களை அதிமுகவினரும் தமிழக அரசும் சேர்த்துள்ளதாகக் கூறி இந்தத்தேர்தலை நிறுத்த திமுக வேட்பாளர் வைகை சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. தேர்தலுக்கு ஒருநாள் தான் இருந்த நிலையில் இந்த தீர்ப்பு மிக பரபரப்பாக தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் நீதிபதி மன்மோகன் சரீன் இந்த வழக்கு மீது இன்று தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பு விவரம்:
வைகை சேகர் கூறிய புகார்களை தேர்தல் கமிஷன் ஆராய்ந்துள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாக நடவடிக்கையும்எடுத்துள்ளது. மேலும் தேர்தல் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தேதி அறிவிக்கப்பட்ட பின் தேர்தல்விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை.
இந்திய அரசியல் சட்டம் 329 (பி) பிரிவின்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அத் தேர்தலை நிறுத்த இந்தநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.
மேலும் இந்த வழக்கு தமிழகம் சம்பந்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே போன்றஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்தத் தீர்ப்பைஅடிப்படையாக வைத்தே இந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்க முடியும்.
அதன்படி திமுகவின் மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
இவ்வாறு தனது உத்தரவில் சரீன் கூறினார்.
முன்னதாக ஆண்டிப்பட்டி தவிர வாணியம்பாடி, சைதாபேட்டை தொகுதிகளிலும் அதிமுகவினர் உதவியுடன்தமிழக அரசு ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்கமிஷனிடம் புகார் கொடுத்தன. இதை விசாரித்த தேர்தல் கமிஷன் வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகியதொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ரத்து செய்தது.
ஆனால், ஆண்டிப்பட்டி தேர்தலை மட்டும் நடத்த முடிவெடுத்தது. இதை எதிர்த்து திமுக பல்வேறுநடவடிக்கைகளில் இறங்கியது. ஆளுநர், ஜனாதிபதியிடம் கூட மனு தந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திலும்தேர்தலை நிறுத்தக் கோரி ஆர்.எஸ்.பாரதி மூலமாக கருணாநிதி வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால் திமுகவின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல்கமிஷனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. இப்போது இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications