தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று (வியாழக்கிழமை)நடந்த இடைத் தேர்தலைப் புறக்கணித்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ளது டி. சுப்புலாபுரம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர்நேற்றைய தேர்தலில் வாக்களிக்கவில்லை.
தங்கள் கிராமத்தில் எந்தக் கட்சியுமே அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்று அம்மக்கள் புகார்கூறினர்.
தங்களது பகுதிகளில் எந்தக் கோரிக்கைகளையும் நிறைவேற்றாத காரணத்தால் தேர்தலைப் புறக்கணித்ததாகவும்அந்தக் கிராம மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications