நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள்இன்டர்நெட்-ஆன்லைன் மூலம் 5 நிமிடத்தில் நுழைவுச் சீட்டைப் பெறுவதற்கான வசதியை தமிழக முதல்வர்ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) துவக்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக இம்முறையை அறிமுகப்படுத்திய பெருமையை அண்ணா பல்கலைக்கழகம்பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இதைத் துவக்கி வைத்து ஜெயலலிதா கூறியதாவது:

பிளஸ் டூ தேர்வுகள் நடக்கும் இந்த நேரத்தில் இந்த நுழைவுச் சீட்டைப் பெறுவதற்காக மாணவர்கள் அலைவதால்நிறைய நேரம் விரயமாகிறது.

ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஆன்லைன் திட்டத்தின்மூலம் நேரம் விரயமாவதுதவிர்க்கப்படுவதோடு, மாணவர்களின் மன உளைச்சலும் தவிர்க்கப்படுகிறது.

கடந்து போன ஆண்டுகளில் இந்த நுழைவுச் சீட்டைப் பெறுவதற்காக மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.ஆனால் தற்போது இந்தச் சிரமங்கள் அனைத்துமே தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் பெறும் முறையை அண்ணாபல்கலைக்கழகம்தான் அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நினைத்துப் பெருமிதம் அடைகிறேன் என்றார்ஜெயலலிதா.

பின்னர் அவர் தேர்வுத் துறை அதிகாரியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார். இதற்காக பெரியஅளவிலான வீடியோ திரைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி நிருபர்களிடம் பேசுகையில்,

மாணவர்கள் ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டைப் பெறுவதற்காக "டிஷ்நெட் பிரவுசிங் சென்டர்" மையத்தில்விசேஷ ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

அங்கு மாணவர்களைப் புகைப்படம் எடுப்பதற்கான சிறிய காமிரா ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில்எடுக்கப்படும் தங்களுடைய புகைப்படத்தையும் தங்களைப் பற்றிய தகவல்களையும் அண்ணா பல்கலைக்கழகவெப்சைட் மூலம் மாணவர்கள் அனுப்ப வேண்டும்.

இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் பதிவாகி உடனடியாகஅம்மாணவர்களின் நுழைவுச் சீட்டு தயார் செய்யப்பட்டு, அடுத்த நிமிடமே மாணவர்களுக்குத் திரும்பவும்அனுப்பப்படும்.

அதன் பிறகு டிஷ்நெட் மையத்தில் உள்ள பிரிண்டர் மூலமாகவே மாணவர்கள் தங்களுடைய நுழைவுச் சீட்டைபிரிண்ட் செய்து கொள்ளலாம்.

இதனால் மாணவர்களுக்கு அலைச்சல் குறைவதோடு மட்டுமல்லாமல், நேரமும் மிச்சமாகிறது. அண்ணாபல்கலைக்கழக ஊழியர்களுக்கும் வேலை நிறைய மிச்சமாகிறது என்றார் கலாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+