ரஜினியின் முன்னாள் கார் டிரைவர் அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

வந்தவாசி:

வந்தவாசி அருகே நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னாள் கார் டிரைவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டனர்.

வந்தவாசியை அடுத்த தென்னாத்தூர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நேற்று காலை தன்னுடையநிலத்துக்குச் சென்றபோது, கோவிந்தராஜ், பரசுராமன், மணி மற்றும் ஜெயபால் ஆகிய நான்கு பேரும் அங்கு கள்குடிப்பதற்காக வந்தனர்.

என்ன காலங்காத்தாலயே கள் குடிக்க வந்துட்டீங்களா என்று அவர்களைப் பார்த்து செல்வராஜ் கேட்டதையடுத்து,அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் செல்வராஜைப் பயங்கரமாகத்தாக்கினர்.

அப்போது அந்த வழியாக வந்த சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் மாரிமுத்து, இவர்களுடைய சண்டையைவிலக்க முயற்சித்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் மாரிமுத்துவைத் தடியால் தாக்கினர்.

இதனால் பயங்கர ரத்தக் காயம் அடைந்த மாரிமுத்து, அதே இடத்தில் விழுந்து துடிதுடித்து இறந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர். ஜெயபால் மட்டும்தலைமறைவாகிவிட்டார். தேசூர் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மாரிமுத்து, நடிகர் ரஜினிகாந்த்திடம் நான்கு ஆண்டுகளுக்கு முன் டிரைவராக இருந்தார்.அப்போது அவரைப் பாராட்டி அவருக்கு ஐந்து வாட்சுகள் கூடப் பரிசாக ரஜினி வழங்கியுள்ளாராம்.

உறவினரின் குடும்ப விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த இடத்தில்தான் மாரிமுத்து கொலை செய்யப்பட்டார். அவருக்குபாப்பு என்ற மனைவியும், தினேஷ்குமார் மற்றும் கருணாதேவி ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+