குஜராத்தில் மீண்டும் வன்முறை: 10 பேர் பலி
அகமதாபாத்:
கடந்த வார இறுதியில் ஓரிரண்டு நாட்கள் மட்டும் அமைதி நிலவிய குஜராத்தில், நேற்று காலை மீண்டும் வன்முறைவெடித்ததில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத்தில் உள்ள தனிலிம்டா, காக்டாபேத் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறைக் கும்பல் சாலையில் சென்றவாகனங்களையும் வீடுகளையும் கடைகளையும் தீவைத்து எரித்தது.
இதில் இரண்டு பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இரண்டு வேர் கத்தியார் குத்திக் கொல்லப்பட்டனர்.ஒருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதைத் தவிர வேறு பல சம்பவங்களில் இரண்டு பேர்கொல்லப்பட்டனர். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதற்கிடையே அகமதாபாத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு முஸ்லீம் இளைஞர்களை வழிமறித்தஒரு வன்முறைக் கும்பல், அந்த இரு இளைஞர்களையும் கற்களால் எறிந்து பயங்கரமாகத் தாக்கியது. இதில் கல்லடிபட்ட அந்த இரு இளைஞர்களும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து கோம்திபூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மசூதி மீது குண்டு வீச்சு:
இதற்கிடையே மிர்சாப்பூர் பகுதியில் உள்ள ஒரு மசூதி மீது இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத ஒருவன்முறைக் கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஆனால் அந்த வெடிகுண்டு மசூதிக்கு உள்ளே சென்று தாக்காமல், அதற்கு வெளிப்புறம் உள்ள சாலையிலேயேவெடித்துச் சிதறியது.
இந்தக் குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தாலும் ஊரடங்கு அமலில் உள்ள அப்பகுதியில்இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டை எறிந்த வன்முறைக் கும்பலைப் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்தனர்.
குஜராத்தில் கில்:
இதற்கிடையே குஜராத் முதல்வரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.எஸ். கில், நேற்று குஜராத்வந்து சேர்ந்தார்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளையும் அவர் நேற்று பார்வையிட்டார்.
வன்முறையை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அவர் மாநில அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தி வருகிறார்.
மனிதத் தன்மையற்ற செயல் - அமெரிக்கா:
இதற்கிடையே குஜராத்தில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் அனைத்தும் மனிதத் தன்மையற்ற செயல்கள்என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகத்துறையின் துணைச் செயலரான மார்க்கரெட் அக்செஸ் இன்று டெல்லியில் இவ்வாறு கூறினார்.
அமெரிக்காவில் வெளியாகும் "டைம்ஸ்" பத்திரிக்கையும் கூட குஜராத் வன்முறை தொடர்பான செய்திகளுக்கு"பிளடி இந்தியா" என்று தலைப்பிட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளதை எதிர்க்க முடியாதசூழ்நிலையில்தான் தற்போது இந்தியா உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications