குஜராத்தில் மோடியின் அராஜகம் தொடர்கிறது

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் ஓய்வில்லாமல் நடந்து வரும் மதக் கலவரத்துக்கு நேற்று மேலும் ஒரு வாலிபர் பலியானார்.

அகமதாபாத்தில் வத்வா அருகே சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்த வாலிபரை ஒரு கும்பல் அடித்துக்கொன்று உடலை ரோட்டில் இழுத்துச் சென்றது. பின்னர் உடல் மீது பெட்ரோலை ஊற்றி நடுரோட்டிலேயே தீவைத்துவிட்டுத் தப்பியது.

ஆனால், கலவரம் கட்டுப்பாட்டில் இருப்பதாக அம் மாநில பா.ஜ.க. முதல்வர் நநேரந்திர மோடி வாய்கிழியப் பேசிவருகிறார்.

மணிநகர் நேற்று இரவு இரு வெடிகுண்டுகளும் வெடித்தன. இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து அங்கு கல்வீச்சுச் சம்பவங்களும் நடந்தன.

பல தலித் காலனிவாசிகளை ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் தொண்டர்கள் மிரட்டி கலவலரத்தில் ஈடுபடுத்திவருவதாக தலித் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பணம், சாராயம் கொடுத்து ஏழை தலித்களை இந்தஅமைப்புகள் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையில் இறக்கி விட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


இதை வாங்க மறுக்கும் தலித்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் அவர்கள் வேறு வழியின்றிவன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகமதாபாத் முழுவதும் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வேலைக்குப் போகமுடியவில்லை. மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குப் போக முடியவில்லை.

இரண்டு மாதங்களில் 1100 பேர் பலியாகிவிட்டனர். வன்முறையை மாநில பா.ஜ.க. அரசும் வி.எச்.பி.,ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் ஆகியவையே நடத்தி வருகின்றன. இதனால் தான் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லைஎன்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மூடப்பட்டு வரும் முகாம்கள்:

இந் நிலையில் மாநிலத்தில் அமைதி திரும்பிவிட்டதாகக் கூறி நிவாரண முகாம்களை மூடிவிட நரேந்திர மோடிதிட்டமிட்டுள்ளார். வீடுகள் எரிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த முகாம்களில் தான் 1.4 லட்சம் முஸ்லீம்கள் தஞ்சம்புகுந்துள்ளனர்.

இப்போது இந்த முகாம்களை மூடிவிடப் போவதாக குஜராத் மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ளமுஸ்லீம்களிடம் நோட்டீஸ்களைத் தந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கும் போக முடியாமல் ரோட்டில்அநாதைகளாக விடப்படுவர்.

நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது:

மோடியின் இந்த கேவலமான செயல் குறித்து காங்கிரஸ் எம்.பிக்கள் லோக்சபாவில் கோஷம் எழுப்பினர்.முகாம்களை மூடும் திட்டம் ஏதும் இல்லை என்று உள்துறை அத்வானி கூறினார். ஆனால், அவர் பொய்யானதகவலைத் தருவதாகக் கூறி குஜராத் மாநில அரசு தந்துள்ள நோட்டீஸ்களை உறுப்பினர்கள் காட்டினர்.

இதையடுத்து அத்வானி அமைதியாகிவிட்டார். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும்என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்ப அதை எதிர்த்து பா.ஜகவினர் கத்த அவையில் கடும் அமளிநிலவியது. இதையடுத்து லோக்சபாவை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+