போடுங்கம்மா ஓட்டு: வாணியம்பாடியில் சிறப்பு பூஜையுடன் ஜெ. பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கினார்.

இதற்காக நேற்றிரவு அவர் சென்னையிலிருந்து வாணியம்பாடிக்குப் புறப்பட்டார்.

ஆரணியில் படவேடு அம்மன் கோவிலில் சிறப்புப் பூஜையுடன் தனது பிரச்சாரத்தை இன்று அவர் துவக்கினார்.

சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிரபாக்கம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 31ம் தேதி தேர்தல் நட்ைபெறவுள்ளது.இதில் அனைத்துத் தொகுதிகளிலும் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

வாணியம்பாடியில் அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை விறுவிறுப்பாக்குவதற்காக கட்சியின் பொதுச் செயலாளரும்,முதல்வருமான ஜெயலலிதா நேற்று இரவு 7 மணிக்கு கார் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

நேராக வேலூர் விருந்தினர் மாளிக்ைகுச் சென்ற அவர் இரவில் அங்கு ஓய்வெடுத்தார். இன்று காலை ஆரணியில் உள்ள படவேடுரேணுகாம்பாள் கோவிலுக்குச் சென்றார்.. அங்கு சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தாபுரத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தனது பிரசாரத்தை அவர்துவக்கினார். வாணயம்பாடியில் வரும் 20ம் தேதி வரை அவர் தீவிர பிரச்சாரம் செய்வார்.

ஜெயலலிதாவின் வருகையையோட்டி கோவிலுக்குச் செல்லும் சாலைக்கு மேக்-அப் போடப்பட்டுள்ளது. அவசரஅடியாகதாரைக் கொட்டியுள்ளார்கள். ஜெயலலிதா வந்து சென்ற பின் ஒரு மாத்ததில் அந்த ரோடு பழைய கரடுமுரடுநிலைக்கு வந்துவிடும்.

மூன்று நாட்கள் ஜெயலலிதா தங்கியிருப்பதற்காக வேலூர் அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கப்பட்டுள்ளது.வேலூர் நகரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்ள்ளது.

இந்த கோவில் பூஜை, யானை தானம் இதற்கெல்லாம் இன்சார்ஜ் அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி தான். அவர் இங்கு கடந்தஇரு நாட்களாக தங்கியிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

வாணியம்பாடியில் பிரசாரத்தை முடித்து விட்டு அச்சிரபாக்கம், அடுத்து சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரம்செய்கிறார்.

ஒவ்வொரு தொகுதிதியிலும் 3 நாட்களுக்கு பிரசாரம் செய்கிறார். சைதை தொகுதியில் நடிகர் ராதாரவியை ஆதரித்துகாலையிலும், மாலையிலும் பிரசாரம் செய்யவுள்ளார். சைதை தொகுதியில் ஜெயலலிதா பிரசாரம் செய்யப் போவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் கோட்டையான அந்தத் தொகுதிப்பக்கம் இதுவரை ஜெயலலிதா எந்தத் தேர்தலிலும் பிரச்சாரம் செய்ததில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+