அமெரிக்க, பிரிட்டிஷ் வீரர்களை வென்ற இந்திய சிங்கங்கள்
ஒகாவெங்கோ பாலைவனம் (போட்ஸ்வானா):
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாட்டு ராணுவத்தினர் கலந்து கொண்ட உடல் திறன் போட்டியில் வென்றுஇந்திய பாராசூட் கமாண்டோ வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான போட்ஸாவானாவின் பாலைவனத்தில் இந்தப் போட்டி நடந்தது.
இதில் 12 நாட்டு ராணுவங்களைச் சேர்ந்த சிறப்புப் படையினர் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில்பாலைவன சிங்கங்கள் என்று பெயரிடப்பட்ட பாரா-காமாண்டோ பிரிவு வீரர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் கடற்படை மற்றும் ரேஞ்சர்ஸ் பிரிவினரும், இங்கிலாந்தின் ஸ்பெஷல் ஏர் சர்வீசஸ் படையினரும்பங்கேற்றனர்.
இந்தியாவின் 12 வீரர்களுக்கு எதிராக 27 பேர் கொண்ட அனைத்து நாடுகள் சிறப்புப் படை போட்டியில்இறங்கியது.
விமானங்கள், ஹெலிகாப்டர்களில் இருந்து பாலைவனத்தில் கீழே குதித்து 10. கி.மீ. தூரம் ஓடி, 10 கி.மீ. தூரம்துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி, 10 கி.மீ. தூரம் சிதறிக் கிடக்கும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிமானங்களிலும் ஹெலிகாப்டர்ளிலும் மீட்டு எடுத்துச் செல்லும் போட்டி அது. உடல்ரீதியிலும் மனரீதியிலும்வீரர்களின் பலத்தை நிரூபிக்கும் மிகக் கடுமையான போட்டி அது.
ஒகாவெங்கா பாலைவனத்தில் எக்ஸர்சைஸ் ஏர்பார்ன் ஆப்ரிக்கா என்ற பெயரில் இந்தப் போட்டி நடந்தது.
இதில் இந்தியாவின் பாலைவன சிங்கங்கள் வென்றன. மேஜர் அனிமேஷ் ராணடே, கேப்ன் கிருஷ்ணதாஸ்ஆகியோர் தலைமையில் சென்ற பிரிவினர் ஒட்டு மொத்த போட்டியில் முதலிடம் பெற்றனர்.
கடந்த ஜூன் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடந்தன. உலகின் மிகச் சிறந்த ராணுவப்பிரிவினரை வென்று வெற்றிவாகை சூடி நாடு திரும்பிய இந்தப் படையினரை ராணுவத் தளபதி பத்மநாபன் இன்றுவரவேற்றார்.
அவர்களுக்கு சிறந்த வீரர்களுக்கான பரிசையும் வழங்கினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications