மருத்துவமனையில் தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
அதிமுக தொண்டரைத் தாக்கியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவரும்முன்னாள் எம்.எல்.ஏவுமான தாமரைக்கனி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தாமரைக்கனியின் மகனும் தற்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏவுமான இன்பத்தமிழன், நகராட்சிவளாகத்திற்குள் வந்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றது தொடர்பாக சமீபத்தில் இருவருக்கும் இடையேகடும் மோதல் ஏற்பட்டது.
இம்மோதலின் போது தாமரைக்கனிக்கு ஆதரவாகப் பேசிய அவருடைய மற்றொரு மகனாகிய தங்கமாங்கனியைஇன்பத்தமிழன் ஆதரவாளர்கள் பயங்கரமாகத் தாக்கியதில் அவருக்கு பலத்த கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்பத்தமிழனின் வற்புறுத்தலுக்கிணங்க தாமரைக்கனி கடந்த புதன்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டார். அதிமுக தொண்டரான ஜெயக்குமார் என்பவரை தாமரைக்கனி கொலை செய்ய முயன்றதாகப்புகார் கூறப்பட்டது. பின்னர் அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதற்கிடையே காவலில் வைக்கப்பட்டிருந்த தாமரைக்கனிக்கு நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய தாமரைக்கனி தன் மகன் இன்பத்தமிழனைப் பற்றி ஏராளமான புகார்களைக்கூறினார்.
தங்கமாங்கனியைக் கத்தியால் குத்திய இன்பத்தமிழனை மட்டும் ஏன் போலீசார் கைது செய்யவில்லை என்றுஆத்திரத்துடன் கேட்டார் தாமரைக்கனி.
அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து திமுகவில் சேர்ந்த பிறகு தாமரைக்கனிக்கு பல்வேறு வகைகளிலும் தமிழக அரசுநெருக்கடி அளித்து வருகிறது. இவ்விஷயத்தில் இன்பத்தமிழனின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் முதல்வர்ஜெயலலிதா ஆதரவாக உள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications