தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது: பிரதமரிடம் கிருஷ்ணா இன்று பேச்சு
Subscribe to Oneindia Tamil
மைசூர்:
இன்று இரவுக்குள் பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவிரியில் தமிழகத்துக்குத்தண்ணீர் தர முடியாது என்று தெரிவிப்பேன் என கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
இன்று மைசூர் சென்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்துக்கு 3 டி.எம்.சி. நீரைத் தருமாறு பிரதமர்வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், கர்நாடகத்தின் அணைக் கட்டுகளில் நீரின் அளவு குறித்துவிவாதித்துவிட்டுப் பேசுவதாகக் கூறியிருந்தேன்.
கடந்த இரு நாட்களாக பிரதமர் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் அவருடன் இது குறித்துப்பேச முடியவில்லை.
இன்று இரவுக்குள் அவருடன் பேசுவேன். கர்நாடக அணைக்கட்டுகளில் நீர் போதிய அளவு இல்லை என்பதைவிளக்குவேன் என்றார்.
இதன்மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்பதை கர்நாடகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.












Click it and Unblock the Notifications