ரெளடிகளை அழைத்து வந்து திமுகவினரை தாக்கிய அதிமுகவினர்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகர்மன்றக் கூட்டத்தில் ரெளடிகளை அழைத்து வந்த அதிமுக கவுன்சிலர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த ரெளடிக் கும்பல்கள் சேர்களை தூக்கி வீசி கடும் தாக்குதல் நடத்தியதில் திமுக கவுன்சிலர்கள், போலீசார், பத்திரிக்கைநிருபர்கள் காயமடைந்தனர். பல நிருபர்களுக்கு மண்டை உடைந்தது.

திருவண்ணாமலை நகர்மன்றம் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று மன்றக் கூட்டம் தொடங்கியவுடன் சென்னை மேயர்பதவியிலிருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கோரினர்.இதை நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் ஏற்றுக கொண்டார்.

இதை எதிர்பார்த்து ஏற்கனவே பார்வையாளர்கள் என்ற பெயரில் ரெளடிகளை அதிமுகவினர் அழைத்து வந்திருந்தனர். இந்தரெளடிகள் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து மன்ற நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்டாலினுக்கு ஆதரவான தீர்மானத்தைக் கொண்டு வந்தவுடன் அதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அப்போது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ரெளடிகளும் இதறகு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன், பார்வையாளர்களாக வந்தவர்கள் அவை நடவடிக்கையில் தலையிடக் கூடாது என்றார்.ஆனால், அந்த ரெளடிகளுக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் பேசினர்.

இதையடுத்து திமுக- அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பார்வையாளர்கள் போர்வையில்வந்த ரெளடிகள் இடையில் புகுந்தனர். திமுக கவுன்சிலர்களை அடிக்க ஆரம்பித்தனர்.

மைக்குகளைக் பிடுங்கிய அதிமுக கவுன்சிலர்கள் அதை நகர்மன்றத் தலைவர் மீது வீசினர். அவரைக் காப்பாற்ற திமுகவினர்ஓடினர். இதையடுத்து திமுகவினர் மீது இரும்பு நாற்காலிகளைத் தூக்கி வீசினர்.

இதில் 11 கவுன்சிலர்களின் மண்டை உடைந்தது. நிருபர்களும் காயமடைந்தனர். இந்தத் மோதலைத் தடுக்க வந்த போலீசார் மீதும்அந்த ரெளடிகள் தாக்குதல் நடத்தினர். இதில் போலீசாரும் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி தலைமையில் திமுகவினர் காந்தி சிலை அருகே சாலை மறியல்போராட்டம் நடத்தினர்.அதிமுகவினரும் போட்டிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தவறு செய்த பார்வையாளர்கள் (ரெளடிகள்) மீது நடவடிக்கை எடுப்பதைவிட்டுவிட்டு நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்ட 60பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாநகராட்சி, நகர்மன்றக் கூட்டங்களில் முதலில் தாங்களே திமுக கவுன்சிலர்களுடன் மோதி வந்த அதிமுகவினர் இப்போதுதுணைக்கு ரெளடிகளையும் அழைத்து வர ஆரம்பித்துள்ளனர். இது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+