சொத்து குவிப்பு: டி.ஐ.ஜியின் பாங்க் லாக்கர்களில் சோதனை
சென்னை:
தமிழக ஊர்க் காவல் படை டி.ஐ.ஜி. ராமநாதனின் வங்கி லாக்கர்களை லஞ்ச- ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனையிட்டனர்.
நேற்று இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள திலகவதி ஐ.பி.எஸ்சின் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடந்துள்ளது.
பெரும் ஊழல் பெருச்சாளியாகக் கருதப்படும் ராமநாதன் கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளார். சேலத்தில் போலீஸ் கமிஷ்னராகஇருந்தபோது அப்போதைய திமுக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மிக நெருக்கமாக இருந்தார். அப்போதுஆறுமுகத்தின் மகன் செய்து வந்த கட்டப் பஞசாயத்துகளுக்கு உதவியாக இருந்தார். சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் பதவியில்இருந்தாலும் பணம் குவித்தது சேலத்தில் தான் என்று தெரிகிறது.
அப்போதைய அமைச்சரின் முழு ஆதரவு இருந்ததால் இவர் ஊழலில் திளைத்தார் என்று கூறப்படுவதுண்டு. அதை உறுதி செய்யும்வகையில் இவருக்கு சென்னையில் நீலாங்கரையில் பல கோடி மதிப்புள்ள பங்களாவும், தமிழகம் முழுவதும் பல பினாமி சொத்துக்களும்உள்ளன.
நேற்று நீலாங்கரை சன்ரைஸ் அவென்யூவில் உள்ள இவரது வீட்டை லஞ்ச- ஒழிப்புப் போலீசார் முற்றுகையிட்டனர். காலை 7 மணிக்குஆரம்பித்த இந்த சோதனை 10 மணி நேரம் தொடர்ந்து. சென்னை அண்ணாநகரில் உள்ள இவரது பினாமியின் வீடு, திருவண்ணாமலையில்உள்ள இவரது உறவினரின் வீட்டிலும் சோதனை நடந்தது.
லஞ்ச- ஒழிப்பு கூடுதல் எஸ்.பி. முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகசாமி, ராஜா சீனிவாஸ், இளங்கோ தலையிைல் போலீசார் இந்தச்சோதனைகளில் ஈடுபட்டனர்.
சிவகங்கைையச் சேர்ந்தவர் ராமநாதன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படிச் சேர்ந்தது என்றுதெரியவில்லை. 1993ம் ஆண்டிலேயே இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக வழக்கு பதிவாகிவிட்டது.
ராமநாதன் பேட்டி:
லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை குறித்து நிருபர்களிடம் பேசிய ராமநாதன்,
ஏற்கனவே என் மீது இது போன்ற தவறான புகார்கள் கூறப்பட்டு அவை தவறானவை என்பதை நான நிரூபித்துள்ளேன். என் பெயரிலும்,மனைவி, இரு மகள்கள் பெயரிலும் உள்ள சொத்துக்களுக்கு வருமான வரி கட்டியுள்ளேன்.
என் மகன் அமெரிக்காவில் இன்ஜினியராக உள்ளார். இந்த நீலாங்கரை வீடு என் மகனுடையது. என்னைப் பழிவாங்கத் துடிக்கும்அதிகாரிகளின் செயலால் தான் இந்தச் சோதனை நடந்துள்ளது என்றார்.
பாங்க் லாக்கர்கள் திறப்பு:
இந் நிலையில் இன்று ராமநாதனுக்குச் சொந்தமான வங்கி லாக்கர்களைத் திறந்து லஞ்ச- ஒழிப்புப் போலீசார் சோதனையிட்டனர்.
நீலாங்கரையில் உள்ள இந்தியன் வங்கியில் ராமநாதனுக்கு பல லாக்கர்கள் உள்ளன. இவற்றை இன்று அதிகாரிகள் சோதனையிட்டுவருகின்றனர்.
சொத்துக் குவிப்பு தொடர்பான புகார்களுக்கு ஆதாரம் சிக்கியுள்ளதாக லஞ்ச- ஒழிப்புப் போலீசார் தெரிவித்தனர். இதனால், இவர்காைதாவார் என்று தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications