நான் அப்படி சொன்னேனா..: ராமதாஸ் புதிய விளக்கம்
சென்னை:
கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை முன்னேற்றுவதற்காகவே தமிழகத்தைஇரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும்விளக்கமளித்துள்ளார்.
கடந்த வாரம் உத்திரமேரூரில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், வன்னியர் ஒருவர்முதல்வராகும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறினார்.
ராமதாசின் இந்தக் கோரிக்கை தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்டபெரும்பாலான கட்சிகள் இதற்காக ராமதாசுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தமிழகத்தை வளமாக்கி இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நம் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தான் கூறியதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இது தொடர்பாக விளக்கமளித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கை:
பின் தங்கிய மாநிலமாகக் கருதப்படும் பிகார் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுவதற்காகத் தான்இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
இதே போல் தான் வட தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர்,விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களும்கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன.
எனவே அந்த மாவட்டங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி அவற்றை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றநோக்கத்தில் தான் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தேன் என்றுஅவ்வறிக்கையில் ராமதாஸ் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications