இதுவும்- அதுவும் தேவையில்லாதது: திருநாவுக்கரசர்
கோயம்புத்தூர்:
விடுதலைப் புலிகளை ஆதரித்து வைகோ பேசியதும், அதற்காக அவரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததும் தேவையில்லாதசெயல்கள் என மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய அவர், பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதை வைத்து வேகவேகமாக பொடாவில் அவரைமுதல்வர் ஜெயலலிதா கைது செய்துள்ளார். நார்வேயும் இலங்கை அரசும் புலிகளுடன் பேசி இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றுகொண்டுள்ள நிலையில் புலிகளை ஆதரித்து வைகோ பேசியிருக்க வேண்டியதும் இல்லை.
தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே ஈழத் தமிழர்களை ஏதாவது ஒரு கால கட்டத்தில் ஆதரித்துத் தான் வந்துள்ளன. பொடா சட்டம்கொண்டு வரப்பட்டது வெளிநாட்டு தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தத் தான். அதில் உள்ள ஓட்டைகளை தேடிப் பிடித்த தமிழக அரசு, அந்தச்சட்டத்தை வைகோவைக் கைது செய்ய பயன்படுத்தியுள்ளது.
தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என ராமதாசின் கோரிக்கையை ஆதரிக்கவும் முடியாது. இந்த கோரிக்கையை ஏற்கவும் முடியாது.
தூத்துக்குடி- கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் சேவை 3 மாதத்தில் தொடங்கும். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் சென்னை-இலங்கை இடையிலும் கப்பல் இயக்குவது குறித்து யோசிக்கப்படும் என்றார்.
தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நான் சர்வே இன்ஸ்பெக்டர் கிடையாது. இப்போதைக்கு தமிழக அரசின்செயல்பாட்டை கணக்கிட வேண்டிய அவசியமும் இல்லை. கடந்த ஓராண்டில் என்ன நடந்தது என்பதை விட வரும் 4 ஆண்டுகளில் என்னநடக்கப் போகிறது என்பதில் தான் நான் ஆர்வமாக உள்ளேன். இந்த விஷயத்தில் மத்திய அரசு உதவியை மாநில அரசுக்கு எப்படி பெற்றுத்தருவது என்று பார்ப்பேன்.
தமிழகத்துக்கு முடிந்தவரை திட்டங்களைக் கொண்டு வருவேன். மத்திய நிதி உதவியையும் பெறுவேன். அந்தப் பணத்தை மாநில அரசுஎப்படி செலவிடுகிறது என்பதையும் கண்காணிப்பேன்.
நான் மத்திய அமைச்சரானதால் பா.ஜ.க. தமிழக எம்.பிக்களிடையே வயிற்றெரிச்சல் எல்லாம் இல்லை. அவர்களின் முனு ஒத்துழைப்புகிடைக்கிறது என்றார்.
திருநாவுக்கரசுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டதால் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்படும் கோயம்புத்தூர் பா.ஜ.க. எம்.பி. ராதாகிருஷ்ணன்உடனிருந்தார். அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் எனக்கு எந்த வயிற்றெரிச்சலும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications