இந்தியா வர அமெரிக்கர்களுக்கு தடை நீங்கியது
டெல்லி:
போர் பயம் காரணமாக இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அந்நாடு விதித்திருந்ததடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 14ம் தேதி ஜம்மூ அருகே கலூச்சாக்கில் உள்ள இந்திய ராணுவ முகாமைத் தாக்கிய பாகிஸ்தான்பயங்கரவாதிகள் சுமார் 40 பேரைச் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேபோர் பதற்றம் ஏற்பட்டது.
அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றசூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் யாரும் இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம்என்று ஆஸ்திரேலியா தான் முதன் முதலாக அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து ஜப்பான், நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் தங்கள்குடிமக்களை இந்தியாவுக்குப் போக வேண்டாம் என்று தடை விதித்தனர்.
மேலும் இந்தியாவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டினரும் உடனடியாக வெளியேறுமாறும் அந்நாடுகள் கேட்டுக்கொண்டன. இதைத் தொடர்ந்து இங்கு தங்கியிருந்த ஏராளமான வெளிநாட்டினர் வெளியேற ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் தணிந்துள்ளது. இதையடுத்து தங்கள்நாட்டினர் இந்தியாவுக்குச் செல்லலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி இந்தியாவுக்கு வரலாம் என்று டெல்லியில் உள்ள அமெரிக்கதூதரகம் இன்று அறிவித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுரையின் படி தூதரகம் இதை அறிவித்துள்ளது.
இதே போல் இங்கிலாந்தும் இது போன்ற தடையை நீக்கியுள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குச்செல்லலாம் என்று அந்நாடு கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications