""கோமளவல்லி என்ற அம்முவே..."": ஜெயாவுக்கு இளங்கோவன் பதில் கிண்டல்
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய சொந்தப் பெயரான "ஆண்டோனியோமேனோ" என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதிலடியாக இவருடைய சொந்தப் பெயரை வைத்து"கோமளவள்ளி என்ற அம்முவே" என்று அழைத்துக் கிண்டலடித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்.
சோனியாவைக் கடுமையாகத் தாக்கி, அவருடைய சொந்தப் பெயரை மட்டுமே பயன்படுத்தி நேற்றுநிருபர்களுக்குப் பேட்டியளித்தார் ஜெயலலிதா.
இதைக் கடுமையாகக் கண்டித்து இன்று நிருபர்களிடம் இளங்கோவன் பேசுகையில்,
சோனியாவின் மீது தொடர்ந்து ஜெயலலிதா சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தால் அவர் கடுமையானவிளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
கடந்த ஆகஸ்டு 14ம் தேதி மதுரையில் நடந்த காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழாவின் போது, மக்கள் விரோதஆட்சி நடத்தும் அதிமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று கூறிய சோனியா, அடுத்த சட்டசபைத் தேர்தலில்காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
இதனால் தான் ஜெயலலிதா கடுப்படைந்து போய் மனநிலை பாதிக்கப்பட்டவர் போலப் பிதற்றி வருகிறார்.
உச்ச நீதிமன்றத்தில் தனக்கு எதிராக உள்ள வழக்குகளிலிருந்து தப்பிக்கவே அவர் இவ்வாறு கூறி வருகிறார். கடந்தவாரம் துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்த பிறகு டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த போது தான் ஜெயலலிதாதன்னுடைய முதற்கட்டத் தாக்குதலைத் தொடங்கினார்.
பின்னர் நேற்றும் சென்னையில் நிருபர்களிடம் சோனியாவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியைத் திருமணம் செய்து கொண்டு சோனியா என்றைக்கு இந்திய மண்ணில் காலடிஎடுத்து வைத்தாரோ, அன்றே அவர் இந்தியக் குடிமகளாகி விட்டார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அதனால் இந்தியப் பிரதமராக வருவதற்கும் சோனியாவுக்கு முழுத் தகுதி உள்ளது. அவருக்கு எதிராகப் பேசுவதற்குஜெயலலிதாவுக்கு எந்த அருகதையும் இல்லை.
பொய் சொல்வதில் வல்லவரான ஜெயலலிதா, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரையே பிளாக் மெயில்செய்துள்ளார்.
சோழர் காலச் சிலைகள் இத்தாலிக்குக் கடத்தப்பட்டதில் சோனியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ஜெயலலிதாகூறியுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐயும் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளார். அப்படியென்றால் அவர் வழக்குதொடர்ந்து பார்க்கட்டுமே?
துரதிருஷ்டவசமாக ஜெயலலிதா தற்போது தமிழக முதல்வராக உள்ளார். ஆனால் அவரை மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டு விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றார் இளங்கோவன்.
நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது ஒரு முறை ஜெயலலிதாவின் உண்மையான பெயராகக் கருதப்படும்"கோமளவல்லி அலையஸ் அம்மு" என்ற ஜெயலலிதா அவர்களே என்று இளங்கோவன் குறிப்பிட்டார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications